விண்வெளிக்குச் செல்லும் மனிதர்கள் யார் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ‘ககன்யான்’ திட்ட பணிகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக செயல்படுத்தி வருகின்றனர். இந்த திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.இந்த திட்டத்தை 2021-ம் ஆண்டில் செயல்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் குறித்து இஸ்ரோ தலைவர் கே. சிவன் கூறுகையில், விண்வெளிக்கு மனிதர்களை 2021ஆம் ஆண்டு அனுப்ப உள்ளோம். அதற்கான வீரர்கள் தேர்வு நடைபெற்று வருகின்றது.விண்ணுக்கு செல்லும் […]
இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ள கருத்தில் சந்திராயன் 2 திட்டத்தின் மூலம் நிலவில் தரையிறக்கப்படும் ஆய்வூர்தி, முதல் கட்டத்தில் 14 நாட்களுக்கு ஆய்வுகளை மேற்கொள்ளும் என்று தெரிவித்துள்ளார். முதன் முதலில் நிலவுக்கு அனுப்பப்பட்ட சந்திராயன்1 விண்கலம் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் ஏவப்பட்டது. ஆனால், சந்திராயன்2 திட்டத்தைப் பொறுத்தவரை, விண்கலம், ஆய்வூர்தி மற்றும் ஆய்வூர்தியை இறக்குவதற்கான லேண்டர் ஆகிய மூன்றும் முதன்முறையாக அனுப்பப்பட உள்ளன. இவற்றின் மொத்த எடை 3 ஆயிரத்து 290 கிலோ என்பதால் ஜிஎஸ்எல்வி மார்க்2 […]
இஸ்ரோ தலைவராக தமிழகத்தை சேர்ந்த சிவன் நியமிக்கபட்டுள்ளார்.இதனால் அவரது சொந்த ஊர் மக்கள் இனிப்பு வழங்கி மகிழ்சியை வெளிபடுத்தினர் . திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மைய இயக்குனராக உள்ள சிவன் இஸ்ரோவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இஸ்ரோ தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பது இதுவே முதன்முறை ஆகும். இஸ்ரோ தலைவராக சிவன் நியமிக்கப்பட்டதற்கு அவரது சொந்த ஊரான நாகர்கோவிலை அடுத்த சரக்கல்விளையைச் சேர்ந்த ஊர் மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். மேலும் சிவன் படித்த சரக்கல்விளை […]