இந்தியா கட்டாயம் ஒரு நாள் நிலவுக்கு மனிதனை அனுப்பும்.! இஸ்ரோ தலைவர் அதிரடி பேட்டி.!

பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் சிவன், இந்தியா கட்டாயம் ஒரு நாள் நிலவுக்கு மனிதனை அனுப்பும். ஆனால், தற்போதைக்கு இல்லை என்றும் தெரிவித்தார். மேலும், இந்திய விண்வெளி ஆராச்சி மையம் சந்திரயான்-3 மற்றும் ககன்யான் திட்டத்தின் வேலைகள் வேகமாக நடந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் சிவனிடம், நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் குறித்து கேட்டதற்கு, அவர் இந்தியா கட்டாயம் ஒரு நாள் நிலவுக்கு மனிதனை அனுப்பும். ஆனால், அது … Read more

துர்கா பூஜையில் "சந்திராயான் 2", இஸ்ரோ தலைவர் சிவனின் உருவ மாதிரிகள் !

உத்தரப்பிரதேசம் வாரணாசியில் நடைபெற்ற துர்கா பூஜையில் “சந்திரயான் 2” தொடர்பான மாதிரிகள் அமைக்கப்பட்டு வழிபாடு மேற்கொண்டுள்ளனர். இந்த பூஜையில் ராக்கெட், விண்வெளி வீரர்கள் மற்றும் இஸ்ரோ தலைவர் சிவன் ஆகியோரின் மாதிரிகள் அமைக்கப்பட்டு பூஜை செய்துள்ளனர். இந்த செயல் இஸ்ரோ தலைவர் சிவனின் கடுமையான உழைப்பிற்கும் இஸ்ரோவின் சாதனைகளுக்கும் சமர்ப்பிப்பதாக கூறியுள்னர்.

விஞ்ஞானிகளை பாராட்டிய பிரதமர் மோடி “நீங்கள் இந்தியாவை பெருமைப்படுத்தியுள்ளீர்கள்”

அதிகாலை 1.30 மணி விக்ரம் லேண்டரை நிலவின் தென்துருவத்தில் மிகவும் மெதுவாக  தரையில் இறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் சமிக்ககளை அனுப்பினர் அதனை விக்ரம் லேண்டர் ஏற்றுக்கொண்டது.2.1 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த போது விக்ரம் லேண்டரின் சமிக்கை அனுப்புவதை நிறுத்திக்கொண்டது . இந்த நிகழ்வை பார்வையிட வந்த பிரதமர் நரேந்திர மோடி விக்ரம் லேண்டருடன் தொடர்பு இழந்த பின்னர் விஞ்ஞானிகளின் முகங்கள் வாடியிருப்பதை கண்டு   விஞ்ஞானிகளை தைரியமாக இருக்கும்படியும்  அவர் விஞ்ஞானிகளுக்கு  தான் ஆதரவளிப்பதாகவும் அவர்களிடம் … Read more

சந்திராயன் 1 மற்றும் சந்திராயன் 2 திட்டங்கள் இடையே உள்ள வித்தியாசங்கள் ஒரு பார்வை!

நிலவின் தரைப்பகுதியில் இறங்கி  ஆய்வினை மேற்கொள்ள நாளை அதிகாலை ஸ்ரீஹரிகோட்டா சதீஸ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து சந்திராயன் 2 விண்கலம் விண்ணில் ஏவப்படுகிறது. உலகில் எந்த நாடுகளும் செய்யாத ஒரு புதிய சாதனையை இஸ்ரோ செய்கிறது. இந்த திட்டத்தின் மைய இருப்பவர் இஸ்ரோ தலைவர் சிவன் ஆவர். இந்தியா சார்பில் நிலவை ஆராய முதல் முதலாக அனுப்பப்பட்ட விண்கலம் சந்திராயன் 1 . கடந்த 2008  ம்மா ஆண்டு இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தால் அனுப்பப்பட்டது. … Read more

விண்ணில் ஏவப்படும் சந்திராயன் -2 விண்கலம் நிலவின் தென் துருவத்தை ஆராயும்-இஸ்ரோ தலைவர் சிவன்

ஜூலை 15 ம் தேதி அதிகாலை 2 மணி 15 நிமிடத்தில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள  சதிஷ் தவான் ஏவுகணை மையத்தில் இருந்து  ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுகிறது சந்திராயன் 2. இந்த நிலையில் இஸ்ரோ தலைவர் சிவன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்தார்.இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், ஜூலை 15ல் விண்ணில் ஏவப்படும் சந்திராயன் -2 விண்கலம் நிலவின் தென் துருவத்தை ஆராயும் .விண்ணுக்கு மனிதனை … Read more