இஸ்ரேல் : ஹமாஸ் தலைவர் ஈரானில் வைத்து இஸ்ரேலால் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக அக்.1இல் இஸ்ரேல் மீது, ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஈரான் தலைநகர் டெஹ்ரானில் ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல். இந்த தாக்குதலில் 4 ஈரான் ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், “இஸ்ரேலின் தாக்குதல் சர்வதேச சட்டம் மற்றும் ஐநா விதிகளுக்கு எதிரானது. ஈரானுக்கு தங்களை தற்காத்துக் கொள்வதற்கான உரிமையும், வெளிநாட்டு ஆக்கிரமிப்புக்கு பதிலளிக்க […]
அமெரிக்கா : ஈரான் தாக்குதலுக்கு பதிலடியாக அந்நாட்டின் மீது இஸ்ரேல், இன்று அதிகாலை முதலாக கொடூரத் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்நிலையில், ஈரான் அணு உலைகள், எண்ணெய் கிடங்குகள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என இஸ்ரேலுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இவ்வாறு, இஸ்ரேலுக்கு அதன் நெருங்கிய கூட்டாளியான அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அக்டோபர் 1 தேதி நடந்த தாக்குதலுக்கு தற்காப்பாக இஸ்ரேல் தற்போது தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அதன்படி, ஈரானின் இராணுவ […]
இஸ்ரல் : ஈரானின் “இராணுவ இலக்குகள்” மீது, இன்று (அக்டோபர் 26) அதிகாலையே துல்லியமான வான்வழித் தாக்குதல்களை தொடங்கியுள்ளது இஸ்ரேல் ராணுவம். அதன்படி, ஈரான் தலைநகர் டெஹ்ரானில் தாக்குதல் நடத்தியதால் பதற்றம் அதிகரித்துள்ளது. ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே மற்றும் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட பின்னர், அக்டோபர் 2 ஆம் தேதி ஹெஸ்புல்லா அமைப்புக்கு ஆதரவாக, இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேம், டெல் அவிவ் நகரங்கள் மீது, 200 பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி […]
இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய 63-வது நாளான இன்றும் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தாக்குதலால் சுமார் 1400 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், பதிலுக்கு இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ் அமைப்பினர் அதிகம் இருக்கும் காசா நகரில் நடத்திய கடுமையான தாக்குதல் 14 ஆயிரம் பேர் உயிரிழந்தனர் என தகவல்கள் வெளியாகியிருந்தது. இந்த தாக்குதலால் பொதுமக்கள், குறிப்பாக காசா நகரத்து பாலஸ்தீன மக்கள், பெண்கள், குழந்தைகள் என பலரும் […]