லெபனான் : தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் இரண்டு ஹிஸ்புல்லா உறுப்பினர்கள் உயிரிழ்ந்தனர் மற்றும் மூன்று பேர் காயமடைந்தனர். தெற்கு லெபனானில் உள்ள நகோராவை இணைக்கும் சாலையில் மோட்டார் சைக்கிள் மீது, இஸ்ரேலிய ஆளில்லா விமானம் மூன்று வான்வெளி ஏவுகணைகளை ஏவியதாக லெபனான் இராணுவ வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றனர். கடந்த நான்கு நாட்களாக இஸ்ரேலிய விமானப்படை ஒரு நாளைக்கு 15 தாக்குதல்களுக்கு மேல் தீவிர வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருவதாக குற்படுகிறது.