இஸ்ரேல் : வடக்கு இஸ்ரேலிய நகரமான சிசேரியாவில் உள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீட்டிற்கு வெளியே பிளாஷ் வெடிகுண்டுகள் வீசப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு இது வரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனவும், விசாரித்து வருவதாகவும் இஸ்ரேல் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வானத்தில் இருந்து வேகமாக வந்த குண்டுகள் தோட்டத்தில் விழுந்ததால் எந்த சேதமும் ஏற்படவில்லை என்று பாதுகாப்புப் படை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இந்த சம்பவத்தின் போது, அந்த நேரத்தில் […]
இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் தொடங்கி இரண்டரை மாதங்களுக்கு மேலாகியும், இஸ்ரேல் பிணைக்கைதிகள் அனைவரும் இன்னும் விடுவிக்கப்படவில்லை. இஸ்ரேல் பிரதமருக்கு அவரது சொந்த நாட்டிலும் எதிர்ப்பு அதிகரித்து வருவதற்கு இதுவே காரணம். சமீபத்தில் வடக்கு காசாவுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பயணம் மேற்கொண்டார். அவருடன் ராணுவ தலைமை தளபதிகளும் சென்றனர். காசாவில் ராணுவ வீரர்களை இஸ்ரேல் பிரதமர் சந்தித்து பேசினார். காசாவில் இருந்து திரும்பிய இஸ்ரேல் பிரதமர் நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றினார். அப்போது, “காஸா பகுதியில் ஹமாஸால் […]
காஸா பகுதியில் போர் தொடங்கி இரண்டு மாதங்களை கடந்து விட்டது. தொடர்ந்து போர் நடைபெற்று வரும் நிலையில், காசா மற்றும் இஸ்ரேலை சேர்த்த பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். காஸாவில் பலர் தங்களது இருப்பிடத்தை விட்டு அருகாமையில் உள்ள நாடுகளுக்கு சென்று விட்டனர். இஸ்ரேல் மக்களை விட, காசா பகுதியில் உள்ள மக்கள் தான் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் தங்களது பெற்றோர்கள் குழந்தைகள் என உறவுகளை இழந்து நிற்கின்றனர். இரு தரப்பும் போரை நிறுத்த வேண்டும் என பல்வேறு […]
இஸ்ரேல – ஹமாஸ் இடையான போர் கடந்த அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கி 45 நாட்களை கடந்து நடைபெற்று வருகிறது. இதில் இஸ்ரேல் மக்கள் 1400 பேர் உயிரிழந்ததாகவும்.காசா நகரில் உள்ள பலஸ்தீன மக்கள் சுமார் 11 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், ஹமாஸ் அமைப்பு முற்றிலும் அழியும் வரையில் போர் நிறுத்தம் இல்லை என் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வெளிப்படையாக அறிவித்தார். ஹமாஸ் தரப்பும் இஸ்ரேலை சேர்ந்த பணையக்கைதிகளை இன்னும் விடுவிக்காமல் இருந்து வருகிறது. […]
கடந்த 6 நாட்களாக பல்வேறு இடங்களுக்குச் சென்றுவிட்டு, தாயகம் திரும்பிய அவர், அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், தனது இந்திய சுற்றுப்பயணத்தை மிகுந்த அர்த்தமுள்ளதாக்கியதற்காக, மோடிக்கு நன்றி தெரிவித்தார். மரபுகளுக்கு மாறாக, விமான நிலையத்திற்கே வந்து மோடி தன்னை வரவேற்றதை சுட்டிக்காட்டினார். இஸ்ரேல்-இந்தியா இடையிலான உறவு மட்டுமின்றி, இருநாட்டு மக்களுக்கும் இடையிலான உறவுகள் பலமடைவதை, இத்தகைய வரவேற்புகள் எடுத்துக்காட்டுவதாகவும் இஸ்ரேல் பிரதமர் தெரிவித்தார். இதற்கு முன்: 6 நாள் அரசுமுறை பயணமாக இஸ்ரேல் பிரதமர் […]