தலைநகர் டெல்லியின் மிகவும் பாதுகாப்பான லுடீயன்ஸ் மண்டல பகுதியில் அமைந்துள்ள டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் சாலையில் உள்ள இஸ்ரேலிய தூதரகம் அருகே நேற்று மாலை குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. இதைத்தொடர்ந்து, டெல்லி பொலிஸ் சிறப்புப் பிரிவின் குழு இன்று காலை இஸ்ரேலிய தூதரகத்திற்கு வெளியே உள்ளது. இந்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை, ஆனால் தூதரகத்தின் முன் நிறுத்தப்பட்டிருந்த ஐந்து வாகனங்களின் கண்ணாடிகள் உடைந்தன. இந்த சம்பவம் இந்தோ-இஸ்ரேலிய தூதரக உறவுகளின் 29 வது ஆண்டு நினைவு […]