தூத்துக்குடியில் உள்ள தனிமை முகாமில் தங்க வைக்கப்பட்டவர்களின் தனிமை நாட்களை பயனுள்ளதாக கழிக்க, அம்மாவட்ட மாநகராட்சி, அவர்களுக்கு புத்தகங்களை வழங்கியது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவும் காரணத்தினால், வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களை தனிமை முகாமில் தங்கவைக்கப்படுவர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, நெகடிவ் என வந்தால் அவர்கள் வீடுகளுக்கு அனுப்புகின்றனர். மேலும், வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் நெகட்டிவ் என வந்தாலும் 7 நாட்கள் முகாமில் தங்கவைக்கப்படுவர். தனி அறையில் இருக்கும் காரணத்தினால் பலருக்கும் மனஉளைச்சல் […]