திண்டுக்கல் மாவட்டம் பாறைப்பட்டியைச் சேர்ந்த முகமது அனீப் சேக் என்பவர் தற்போது குஜராத்தில் வசித்து வருகிறார். இந்த நிலையில் திண்டுக்கல் பாறைப்பட்டியில் இந்துக் கோவில் கட்டுவதற்கு நன்கொடை திரட்ட அவர் நண்பரான விஜயகுமார் முகமது அனீப் சேக் வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் இருவரும் பல்வேறு மதராசாக்களுக்கும், நண்பர்களின் வீடுகளுக்கும் சென்று ரூ.3 லட்சம் நிதி திரட்டியுள்ளனர். இந்நிலையில், பாறைப்பட்டி மக்கள் தங்களை இந்துக்களாகவோ, இஸ்லாமியராகவோ நினைப்பதில்லை என்றும், உறவினர்களாகவும் நண்பர்களாகவும் பழகி வருவதாகவும் மத நல்லிணக்கத்துக்குச் சான்றாகத் […]