Sadhguru: “பக்தியெனும் மொழியில் பாடுவதை கேட்க விருந்தாக இருந்தது” என சத்குரு பாராட்டியுள்ளார். ஜெர்மன் நாட்டை சேர்ந்த பிரபல பாடகி கசாண்ட்ரா மே ஸ்பிட்மன் கோவை ஈஷா யோக மையத்தில் சத்குரு அவர்களை சந்தித்தார். அப்போது அவரது விருப்ப பாடலான ஆதிசங்கரர் எழுதிய “நிர்வாண ஷடக”த்தை பாடிக்காட்டினார். இந்த காணொளியை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த சத்குரு கசாண்ட்ராவிற்கு பாராட்டு தெரிவித்தார். சமூக வலைதளத்தில் மிகவும் புகழ் பெற்றிருப்பவர் ஜெர்மன் பாடகி கசாண்ட்ரா மே ஸ்பிட்மன். பார்வையற்ற மாற்றுத் திறனாளியான […]
ஆதியோகி முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள யோகேஸ்வர லிங்கத்திற்கு சப்தரிஷி ஆரத்தி நேற்று (டிச. 22) சிறப்பாக நடைபெற்றது. இந்த சப்தரிஷி ஆரத்தி, சிவ பெருமான் தனது ஏழு சீடர்களான சப்தரிஷிகள், அவரது அருளைப் பெறுவதற்காக அவர்களுக்கு கற்றுக்கொடுத்த சக்திவாய்ந்த செயல்முறை. இது வாரணாசியில் இருக்கும் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோவிலில் பல நூறு வருடங்களாக நடத்தப்பட்டு வருகிறது. அதற்கு அடுத்தப்படியாக ஆதியோகியில் தான், கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சிக்காக , காசி […]
புகழ்பெற்ற மண்ணியல் வல்லுநர்கள் மற்றும் விஞ்ஞானிகள் பங்கேற்ற சர்வதேச மாநாட்டில் உலகளவில் 7 பிராந்தியங்களுக்கான ‘மண் காப்போம்’ கொள்கை விளக்க புத்தகத்தை சத்குரு வெளியிட்டார். உலக மண் தினத்தை முன்னிட்டு ‘மண் காப்போம்’ இயக்கம் சார்பில் ஆன்லைன் வாயிலாக நடைபெற்ற இந்த சர்வதேச வட்ட மேசை மாநாட்டில் 31 நாடுகளை சேர்ந்த 155 மண்ணியல் வல்லுநர்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக, ஐ.நாவின் பாலைவனமாதலை தடுக்கும் கூட்டமைப்பின் பொது செயலாளர் (UNCCD) திரு.இப்ராஹிம் தியாவ், ஆஸ்திரிலேய நாட்டு வேளாண் […]
ஈஷாவின் வழிகாட்டுதலின் கீழ் செயல்படும் கோவை வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனம் 2021-2022-ம் நிதியாண்டில் ரூ.17.7 கோடி மொத்த வருவாய் ஈட்டி (Annual Turn over) புது சாதனை படைத்துள்ளது. இது கடந்த நிதியாண்டை விட ரூ.3.7 கோடி அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனம் சத்குருவின் ஆலோசனையின் படி, கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் கடந்த 2013-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 1063 விவசாய உறுப்பினர்களை கொண்டுள்ள இந்நிறுவனத்தில் 404 பேர் பெண் விவசாயிகள் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து லாபகரமாக […]
தமிழகத்தில் உள்ள 1,018 ஊர்களின் பெயர்களை தமிழ் உச்சரிப்பை போன்றே ஆங்கிலத்திலும் திருத்தம் செய்துள்ள தமிழக அரசின் நடவடிக்கைக்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ் – ஒரு உணர்வுப்பூர்வமான மொழி, தொன்மையான கலாச்சாரமும்கூட. இடத்தின் பெயர்கள் அவற்றின் பெருமைவாய்ந்த கலாச்சார சிறப்பு, வரலாறு & ஆன்மீக முக்கியத்துவத்தை குறிக்கும். தமிழ் மக்களுக்கு தங்கள் மண்ணின் மீது ஆழ்ந்த பிடிப்பினை உண்டாக்கும் அதன் […]