ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், சமூக தலைவர் அப்துல் அலி மஸ்ரியின் நினைவு நாளை முன்னிட்டு பேரணி நடைபெற்றது. பயங்கரவாதிகள் இந்த பேரணியை குறி வைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 32 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 60-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இதில் காயமடைந்தவர்கள் நிலை மிகவும் மோசமாக உள்ளதாகவும், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என்றும் கூறப்படுகிறது. ஐ.எஸ்.பயங்கரவாக்க இயக்கம் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.