நேற்று முதல்வர் கல்லணையை தூர்வாரும் பணியை பார்வையிட திருச்சி சென்றிருந்தார். இன்று மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக நீர் திறந்து விட சேலம் செல்கிறார். நேற்று முதல்வர் திருச்சியில் உள்ள கல்லணையில் தூர்வாரும் பணிகளை பார்வையிடுவதற்காக திருச்சி சென்றிருந்தார். கல்லணையை பார்வையிட்ட பின்பதாக டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தி இருந்தார்.அதன் பின்பாக நேற்று திருச்சியில் ஓய்வெடுத்த முதல்வர், இன்று சேலம் மாவட்டம் மேட்டூர் அணையை பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த […]
மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக நீர் திறக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலுள்ள மிகப்பெரிய நீர் தேக்கமாக விளங்கும் மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். அதுபோல இந்த ஆண்டு ஜூன் 12ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட்டார். அதுபோல மேற்கு கால்வாய் மூலம் ஈரோடு, சேலம், […]
வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதற்கு, நான்கு மாவட்ட விவசாயிகள் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளனர். வைகை பூர்வீக பாசனத்திற்காக வைகை அணை இன்று திறக்கப்பட்டது. தொடர்ந்து ஆறு நாட்களுக்கு 184 மில்லியன் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஒரு லட்சத்து 62 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பயன்பெற உள்ளன. இதன்மூலம், இரண்டாம் போக சாகுபடிக்கு தேவையான தண்ணீர் கிடைக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.