தமிழகத்தில் காவல்துறையினை சுதந்திரமாக செயல்பட வைக்க வேண்டும். பிரதமர் வந்து ஒருமாதம் ஆன பின்னர் ஏன் அண்ணாமலை இந்த குற்றசாட்டை முன் வைத்தார் என தெரியவில்லை. – டிடிவி.தினகரன் குற்றசாட்டு. தமிழகத்தில் காவல்துறையினை சுதந்திரமாக செயல்பட வைத்து அதன் மீதான கரையை துடைக்க முதல்வர் தான் அனுமதி தரவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை அமமுக தலைவர் டி.டி.வி.தினகரன் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘ பிரதமர் வந்து ஒருமாதம் ஆன பின்னர் ஏன் அண்ணாமலை […]
இரட்டை இலையை மீட்டுவிட்டோம் என்று ஒபிஎஸ் குதூகலிக்கிறார் முடக்கியதே இவர்தானே. இவரைப் போலவே தேர்தல் ஆணையத்திலும் “நியாயவான்கள்” நிறைந்திருக்கிறார்கள். ஒபிஎஸ் சோடு 12 எம்எல்ஏக்கள் போய்விட்டதால் முடக்கினோம் என்றவர்கள் தினகரனோடு 20 எம்எல்ஏக்களே இருப்பதால் ஒபிஎஸ் உள்ள அணியிடம் கொடுத்து விட்டோம் என்கிறார்கள்… இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சசிகலா மற்றும் TTV தினகரன் அணியை சேர்ந்த சில நிர்வாகிகள் உசிலம்பட்டியில் குரங்குகளின் கையில் பூ மாலை என போஸ்டர் ஓட்டியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இரட்டை இலை சின்னமும் கட்சியும் கைவிட்டு போனதால் தினகரன் அணி வருத்தத்தில் உள்ளது. கட்சியும் சின்னமும் இனி இபிஎஸ் – ஓபிஎஸ் அணிக்கு மட்டுமே சொந்தமாகி இருப்பதால் அடுத்த வரும் R.K.நகர் இடைத்தேர்தலில் கட்சி பெயரையும் சின்னத்தையும் தினகரன் தரப்பு பயன்படுத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனை தொடர்ந்து கட்சியிலுள்ள துணை பொதுசெயலாளர் பதவியும் பறிபோய் உள்ளது. R.K.நகர் இடைத்தேர்தலில் கொடுக்கப்பட்ட தொப்பி சின்னமும் இனி இல்லை. இருந்தாலும் இடைதேர்தலில் தினகரன் கண்டிப்பாக போட்டியிடுவதாக கூறினார். […]
இரட்டை இலை சின்னம் பெற சசிகலா தினகரன் அணி சார்பாக லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் குரல் மாதிரியை தர எதிர்ப்பு தெரிவித்து TTV.தினகரன் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில் டெல்லி குற்றப்பிரிவு போலீசார் குரல் மாதிரியை கேட்பது மக்கள் அடிப்படை உரிமைக்கு எதிரானது. என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் அடுத்த வருடம் மார்ச் மாதம் 19ஆம் தேதிதான் விசாரிக்க உள்ளதாம்