ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அமெரிக்க ரோந்து கப்பல்களை வழிமறித்த ஈரான் கடற்படை படகுகளை எச்சரிக்கும் வகையில், அமெரிக்க கடற்படைக் கப்பல்கள் 30 முறை துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. பல வருட காலங்களாகவே அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையேயான பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. அதிலும் பாரசீக வளைகுடா பகுதியில் அமைந்துள்ள சர்வதேச கடல் பரப்பிற்கும் ஈரானின் கடற்பரப்பிற்கும் இடையேயான ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்படுவது வழக்கம். இந்நிலையில், நேற்று அமெரிக்க கப்பல்கள் […]
ஈரானின் உயர்ந்த அணு விஞ்ஞானி மொஹ்சென் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், இஸ்ரேலை ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. ஈரானின் முன்னணி விஞ்ஞானிகளில் ஒருவரான மொஹ்சென் பக்ரிசாதி அவர்கள் பயங்கரவாதிகளால் கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் இவரது படுகொலைக்கு கண்டனம் தெரிவித்த ஈரானின் வெளியுறவு மந்திரி மற்றும் அரசு சார்பில் இது படுகொலை மற்றும் பயங்கரவாத சம்பவம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த பயங்கரவாத சம்பவத்தில் இஸ்ரேலுக்கும் பங்கு இருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது. ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை அமைதியான நோக்கங்களுக்காக […]