கேரளா : சஞ்சு சாம்சனுக்கு நேற்று வலது ஆள்காட்டி விரலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில், சஞ்சு சாம்சனுக்கு கை விரலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட புகைப்படத்தை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பகிர்ந்துள்ளது. இப்போது மருத்துவர்கள் குழுவுடன் சாம்சனின் புகைப்படம் வைரலாகி வருகிறது. அவர் விரைவில் குணமடைய ரசிகர்கள் பிரார்த்திக்கும் நிலையில், ஐபிஎலில் அவர் விளையாடுவது கேள்விக்குறியாகியுள்ளது. ஐபிஎல் தொடங்க இன்னும் 38 நாள்களே மீதமுள்ள நிலையில், இந்த குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் குணமடைந்தால் தான் அவரால் […]
சென்னை : தோனி ரசிகர்களுக்கு எப்போதும் பதட்டமாக இருக்கும் விஷயம் என்றால் அவர் எப்போது ஐபிஎல் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவிப்பார் என்பது தான். எனவே, ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவதற்கு முன்பு தோனி இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவாரா? என்பது தான் மிகப்பெரிய கேள்வியாகவும் இருந்து வருகிறது. அப்படி தான் அடுத்த ஆண்டு (2025) நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் தோனி விளையாடுவாரா அல்லது ஓய்வு பெறப்போகிறாரா? என ரசிகர்கள் கவலையுடன் சேர்ந்த எதிர்பார்ப்புகளில் காத்திருக்கிறார்கள். […]
IPL Auction : அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு மெகா ஏலம் நடைபெற இருக்கும் நிலையில் ரிடெயின் செய்யும் வீரர்களை அதிகரிக்க வேண்டும் பிசிசிஐக்கு சில ஐபிஎல் அணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஐபிஎல் தொடர் நடைபெறுவதற்கு முன் அதற்கான மினி ஏலம், மெகா ஏலம், டிரேடிங் போன்ற நிகழ்வுகளின் படி அணியில் வீரர்களை எடுப்பார்கள். அதிலும் மெகா ஏலம் என்றால் அந்த ஆண்டின் ஐபிஎல் ஏலம் மிகவும் பரபரப்பாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அடுத்த ஆண்டிற்கான […]