டெல்லியை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்த சென்னை சூப்பர் கிங்ஸ்..!

சென்னை அணி 19.4 ஓவர் முடிவில் 173 ரன்கள் எடுத்தது 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

ஐபிஎல் தொடரின் முதலாவது தகுதி சுற்று போட்டியில் டெல்லி கேபிடல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய இரு அணிகளும் விளையாடியது. இப்போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில்நடைபெற்றது. டாஸ் வென்ற சென்னை முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய டெல்லி அணி தொடக்க வீரர்களான ஷிகர் தவான், பிரித்வி ஷா  களமிறங்க வந்த வேகத்தில் தவான் 7 ரன்களில் வெளியேற, அதிரடியாக விளையாடி வந்த பிரித்வி ஷா 60 ரன்கள் அடித்து அவுட்டானார். இதன்பின் வந்த அக்சர் படேல் 10 ரன்கள், ஸ்ரேயாஸ் ஐயர் 1 ரன் எடுத்து ஆட்டமிழக்க, கேப்டன் ரிஷப் பந்த் மற்றும் ஷிம்ரான் ஹெட்மியர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர்.

சிறப்பாக விளையாடிய ரிஷப் பந்த் 51* ரன்கள் அடித்து களத்தில் கடைசிவரை  இருந்தார். இறுதியாக 20 ஓவர் முடிவில் டெல்லி 5 விக்கெட் இழந்து 172 ரன்கள்  எடுத்தனர். சென்னையில் ஜோஷ் ஹேசில்வுட் 2 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா, பிராவோ, மொயீன் அலி தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

173 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியுள்ளது. சென்னை அணியில் தொடக்க வீரராக ருதுராஜ் ,ஃபாஃப் டு பிளெசிஸ் இருவரும் களமிறங்கினர். இரண்டாவது பந்திலேயே ஃபாஃப் டு பிளெசிஸ் அன்ரிச் நார்ட்ஜேயிடம் போல்டானார்.

பின்னர் ராபின் உத்தப்பா, ருதுராஜ் இருவரும் கூட்டணி அமைத்து அணியின் எண்ணிக்கையை சற்று உயர்த்தினர். சிறப்பாக விளையாடி வந்த ராபின் உத்தப்பா அரைசதம் விளாசி 63 ரன்கள் எடுத்தார். அதில் 7 பவுண்டரி 2 சிக்சர்கள் அடங்கும். இதைத்தொடர்ந்து களமிறங்கிய ஷர்துல் தாகூர் வந்த முதல் பந்திலேயே டக் அவுட்டாகி சென்றார். அடுத்து இறங்கிய அம்பத்தி ராயுடு ஒரு ரன் எடுத்து ரன் அவுட்  ஆனார்.

சிறப்பாக விளையாடி வந்த ருதுராஜ் 19வது ஓவரில் அக்சர் படேலிடம் கேட்சை கொடுத்து 70 ரன்னில் வெளியேறினார். கடைசி ஓவரில் 6 பந்தில் 13 ரன்கள் தேவை என்ற நிலையில் சென்னை அணியின் கேப்டன் தோனி முதல் இரண்டு பந்தில் பவுண்டரி விளாசினார். பின்னர் அடுத்த பந்தில் வைடு செல்ல அடுத்த பந்தில் மீண்டும் தோனி பவுண்டரி விளாசி அணியை வெற்றி பெற செய்தார். இறுதியாக சென்னை அணி 19.4 ஓவர் முடிவில் 173 ரன்கள் எடுத்தது 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

யாருக்கு நேரடி பைனல் வாய்ப்பு ..! டாஸ் வென்ற சென்னை ஃபீல்டிங் தேர்வு ..!

டாஸ் வென்ற சென்னை முதலில் ஃபீல்டிங் தேர்வு செய்தனர். 

ஐபிஎல் தொடரின் முதலாவது தகுதி சுற்றில் சென்னை-டெல்லி ஆகிய அணிகள் துபாயில் உள்ள துபாய் சர்வதேச மைதானத்தில் மோதவுள்ளது. டாஸ் வென்ற சென்னை முதலில் ஃபீல்டிங் தேர்வு செய்தனர்.

சென்னை அணி வீரர்கள்: 

ருதுராஜ் கெய்க்வாட், ஃபாஃப் டு பிளெசிஸ், மொயீன் அலி, ராபின் உத்தப்பா, அம்பதி ராயுடு, தோனி (கேப்டன்/ விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

டெல்லி அணி வீரர்கள்: 

ஷிகர் தவான், பிரித்வி ஷா, ரிஷப் பந்த் (கேப்டன் /விக்கெட் கீப்பர்), ஸ்ரேயாஸ் ஐயர், சிம்ரான் ஹெட்மியர், அக்ஸர் பட்டேல், ரவிச்சந்திரன் அஸ்வின், ககிசோ ரபாடா, டாம் குர்ரான், அவேஷ் கான், அன்ரிச் நார்ட்ஜே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை அணி..!

ஹைதராபாத் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 193 ரன்கள் எடுத்து 42 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

ஐபிஎல் தொடரின் 55-வது லீக் போட்டியில் மும்பை vs ஹைதராபாத் ஆகிய அணிகள் அபுதாபியில் உள்ள சயீத் மைதானத்தில் மோதியது. டாஸ் வென்ற மும்பை முதலில் பேட்டிங் தேர்வு செய்தனர். அதன்படி மும்பை அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, இஷான் கிஷன் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்தில் இருந்து அதிரடியாக விளையாடிய இஷான் கிஷன் 32 பந்தில் 11 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 84 ரன்கள் குவித்து வெளியேறினார்.

பின்னர் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா, கீரான் பொல்லார்ட், க்ருனால் பாண்டியா சிறப்பாக விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சொற்ப ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார்கள்.  பின்னர் மத்தியில் இறங்கிய சூர்யகுமார் யாதவ் , இஷான் கிஷன் போல அதிரடியாக விளையாடி 40 பந்தில் 13 பவுண்டரி, 3 சிக்ஸர் என மொத்தம்  82 ரன் விளாசினார்.

இறுதியாக மும்பை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 235 ரன்கள் எடுத்தனர். ஹைதராபாத் அணியில் ஜேசன் ஹோல்டர் 4, ரஷித் கான், அபிஷேக் சர்மா தலா 2 விக்கெட்டையும் பறித்தனர். 236 ரன்கள் இலக்குடன் ஹைதராபாத் அணியில் தொடக்க வீரர்களாக ஜேசன் ராய், அபிஷேக் சர்மா இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்தில் இருந்து இருவரும் அதிரடியாக விளையாடினர்.

சிறப்பாக விளையாடி வந்த ஜேசன் ராய்  6 பவுண்டரி அடித்து 34 ரன்கள் எடுத்து க்ருனால் பாண்டியாவிடம் கேட்சை கொடுத்து விக்கெட்டை இழந்தார். அடுத்த சில நிமிடங்களில் அபிஷேக் சர்மா 33 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார். அடுத்து இறங்கிய முகமது நபி 3, அப்துல் சமத் 2 ரன் எடுத்து அடுத்தது விக்கெட்டை இழந்தனர்.

பின்னர் களம் கண்ட மணீஷ் பாண்டே,  பிரியம் கர்க் இருவரும் கூட்டணி அமைத்து அணியின் எண்ணிக்கையை சற்று உயர்த்தினர். நிதானமாக விளையாடிய பிரியம் கர் 29 ரன் எடுத்த போது ஹர்திக் பாண்டியாவிடம் கேட்சை கொடுத்தார். சிறப்பாக விளையாடிய வந்த மணீஷ் பாண்டே அரைசதம் விளாசி 69 ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் நின்றார்.

இறுதியாக ஹைதராபாத் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 193 ரன்கள் எடுத்து 42 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இப்போட்டியில் மும்பை வெற்றி பெற்று 14 புள்ளிகள் பெற்று 5-வது இடத்த்திற்கு வந்து பிளே ஆப் தகுதியை இழந்தது.

இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் காட்டடி.., 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை ..!

மும்பை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 235 ரன்கள் எடுத்தனர்.

ஐபிஎல் தொடரின் 55-வது லீக் போட்டியில் மும்பை vs ஹைதராபாத் ஆகிய அணிகள் அபுதாபியில் உள்ள சயீத் மைதானத்தில் மோதி வருகிறது. டாஸ் வென்ற மும்பை முதலில் பேட்டிங் தேர்வு செய்தனர். அதன்படி மும்பை அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, இஷான் கிஷன் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்தில் இருந்து அதிரடியாக விளையாடிய இஷான் கிஷன் 16 பந்துகளில் அரை சதம் விளாசினார்.

நிதானமாக விளையாடி வந்த ரோஹித் 18 ரன்னில் விக்கெட்டை இழந்தார். ஆனாலும், சிறப்பாக விளையாடி வந்த இஷான் கிஷன் 32 பந்தில் 11 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 84 ரன்கள் குவித்து வெளியேறினார். பின்னர் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா, கீரான் பொல்லார்ட் சிறப்பாக விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஹர்திக் பாண்டியா 10, கீரான் பொல்லார்ட் 13 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்கள்.

அடுத்து இறங்கிய வீரர்களும் நிலைத்து நிற்கவில்லை, பின்னர் மத்தியில் இறங்கிய சூர்யகுமார் யாதவ் , இஷான் கிஷன் போல அதிரடியாக விளையாடினார். 40 பந்தில் 13 பவுண்டரி, 3 சிக்ஸர் விளாசி 82 ரன்னில் சூர்யகுமார் யாதவ் கடைசி ஓவரில் விக்கெட்டை இழந்தார். இறுதியாக மும்பை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 235 ரன்கள் எடுத்தனர். ஹைதராபாத் அணியில் ஜேசன் ஹோல்டர் 4, ரஷித் கான், அபிஷேக் சர்மா தலா 2 விக்கெட்டையும் பறித்தனர்.

மும்பை பிளே ஆப்பிற்கு தகுதி பெறுமா..? முதலில் பேட்டிங் தேர்வு..!

டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் இன்றுடன் முடிவடையவுள்ளது. அதே நேரத்தில் முதல் முறையாக ஒரே நேரத்தில்இரண்டு போட்டிகளும் இன்று நடைபெறவுள்ளன.  அதன்படி, ஒரு போட்டியில் மும்பை vs ஹைதராபாத் ஆகிய அணிகள் அபுதாபியில் உள்ள சயீத் மைதானத்தில் மோதவுள்ளது.

இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

 ஹைதராபாத் அணி வீரர்கள்:

ஜேசன் ராய், அபிஷேக் சர்மா, மணீஷ் பாண்டே (கேப்டன்), பிரியம் கார்க், அப்துல் சமத், விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), ஜேசன் ஹோல்டர், ரஷித் கான், முகமது நபி, உம்ரான் மாலிக், சித்தார்த் கவுல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மும்பை அணி வீரர்கள்:

ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, பொல்லார்ட், க்ருனால் பாண்டியா, ஜேம்ஸ் நீஷாம், நாதன் கூல்டர்-நைல் பும்ரா, பியூஷ் சாவ்லா, ட்ரெண்ட் போல்ட்

ராஜஸ்தானை வீழ்த்தி கொல்கத்தா அணி அபார வெற்றி..!

ராஜஸ்தான் அணி 16.1 ஓவர் முடிவில் 85 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்து 86 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 54வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய இரு அணிகளும் மோதியது. ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய கொல்கத்தா தொடக்க வீரர்களான சுப்மான் கில் 56 ரன்களும், வெங்கடேஷ் ஐயர் 38 ரன்களும் அடித்து விக்கெட்டை இழந்தனர். இறுதியாக 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 171 ரன்களை கொல்கத்தா அணி எடுத்து. 172 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால், லியாம் லிவிங்ஸ்டோன் இருவரும் களமிறங்கினர். வந்த வேகத்தில் ஜெய்ஸ்வால் டக் அவுட் ஆனார்.

பின்னர் இறங்கிய சஞ்சு சாம்சன் 1 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார். அடுத்த சில நிமிடங்களில் லியாம் லிவிங்ஸ்டோன் 6 ரன் எடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த சிவம் துபே 18 ரன் எடுத்து விக்கெட்டை இழக்க பின் ராஜஸ்தான் அணியில் களம் கண்ட அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்கு ரன்களுடன் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.

ராஜஸ்தான் அணியில் மத்தியில் இறங்கிய ராகுல் திவாட்டியா மட்டும் நிதானமான ஆட்டத்தால் 44 ரன் எடுக்க இறுதியாக ராஜஸ்தான் அணி 16.1 ஓவர் முடிவில் 85 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்து 86 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

கொல்கத்தா அணியில் சிவம் மாவி 4, லோக்கி பெர்குசன்3 , வருண் சக்கரவர்த்தி, ஷாகிப் அல் ஹசன் தலா 1 விக்கெட்டை பறித்தனர். கொல்கத்தா வெற்றி பெற்றதன் மூலம் புள்ளி பட்டியலில் 14 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது.

வைரல் வீடியோ: மைதானத்தில் வைத்து love Propose செய்த தீபக் சாஹர்..!

இன்றைய போட்டி முடிந்த பிறகு சென்னை வீரர் தீபக் சாஹர் தனது தோழியிடம் தன் காதலை வெளிப்படுத்தினர்.

இன்றைய ஐபிஎல் 2021 இன் 53 வது லீக் போட்டியில் சென்னை மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியது. முதலில் இறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 134 ரன் எடுத்து 6 விக்கெட்டை இழந்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக ஃபாஃப் டு ப்ளெஸிஸ் 76 ரன்கள் எடுத்தார். பின்னர் களமிறங்கிய பஞ்சாப் அணி 13 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 139 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கே.எல் ராகுல் 42 பந்தில் 8 சிக்ஸர் , 7 பவுண்டரி விளாசி 98* ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் நின்றார். இந்நிலையில், இப்போட்டி முடிந்த பிறகு சென்னை வீரர் தீபக் சாஹர் தனது தோழியிடம் தன் காதலை வெளிப்படுத்தினர். பின்னர், இருவரும் மோதிரம் மாற்றி கொண்டனர். இருவரும் மோதிரம் மாற்றி கொண்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. தீபக் சாஹருக்கு ரசிகர்கள் ஒருபுறம் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மறுபுறம் இன்றைய போட்டியில் தீபக் சாஹர் 4 ஓவர் வீசி 48 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டை மட்டுமே எடுத்தார். இதனால், இன்றைய போட்டியில் சென்னை அணி தோல்வி பெற தீபக் சாஹர் காரணம் என கூறி வருகின்றனர். இன்றைய போட்டியில் ஷர்துல் தாக்கூர் 3 ஓவர் மட்டுமே வீசி 3 விக்கெட்டை பறித்து 28 ரன்கள் மட்டுமே கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கே.எல் ராகுல் காட்டடி.., சென்னை ஹாட்ரிக் தோல்வி..!

பஞ்சாப் அணி 13 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 139 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இன்றைய ஐபிஎல் 2021 இன் 53 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியது. இப்போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி ஃபீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட், ஃபாஃப் டு ப்ளெஸிஸ் இருவரும் களமிறங்கினர்.

வந்த வேகத்தில் ருதுராஜ் 12 ரன் எடுத்து ருதுராஜ் வெளியேனார். பின்னர், களம் கண்ட மொயீன் அலி டக் அவுட் ஆக ராபின் உத்தப்பா 2 , அம்பதி ராயுடு 4 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். அடுத்து இறங்கிய கேப்டன் தோனி  12 ரன்னில் பிஷ்னோயிடம் போல்ட் ஆனார். நிதானமாக விளையாடிய ஃபாஃப் டு ப்ளெஸிஸ் அரைசதம் விளாசி 76 ரன்கள் எடுத்து விக்கெட்டைஇழந்தார்.

இறுதியாக சென்னை அணி 20 ஓவர் முடிவில் 134 ரன் எடுத்து 6 விக்கெட்டை இழந்தது. பஞ்சாப் அணியில் அர்ஷ்தீப் சிங், கிறிஸ் ஜோர்டான் தலா 2 விக்கெட்டும், ரவி பிஷ்னோய் , ஷமி தலா 1 விக்கெட்டை பறித்தனர். 135 ரன்கள் இலக்குடன் பஞ்சாப் அணியில் தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால், KL ராகுல் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே மயங்க் அகர்வால் 12 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.

அடுத்து களமிறங்கிய சர்பராஸ் கான் டக் அவுட் ஆக, ஷாருக்கான் 8 ரன் எடுத்து அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். ஆனால், மறுபுறம் கே.எல் ராகுல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றி பெற செய்தார். இறுதியாக பஞ்சாப் அணி 13 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 139 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கே.எல் ராகுல் 42 பந்தில் 8 சிக்ஸர் , 7 பவுண்டரி விளாசி 98* ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் நின்றார். இப்போட்டியில் சென்னை தோல்வி அடைந்ததால்  தொடர்ந்து 3 போட்டிகளில் தோல்வியை தழுவியது.

பந்து வீச்சில் மிரட்டிய பஞ்சாப்.., 135 ரன் இலக்கு நிர்ணயித்த சென்னை ..!

சென்னை அணி 20 ஓவர் முடிவில் 134 ரன் எடுத்து 6 விக்கெட்டை இழந்தது.

இன்றைய ஐபிஎல் 2021 இன் 53 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி வருகிறது. இப்போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி ஃபீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட், ஃபாஃப் டு ப்ளெஸிஸ் இருவரும் களமிறங்கினர்.

வந்த வேகத்தில் ருதுராஜ் 12 ரன் எடுத்து ருதுராஜ் வெளியேறி ரசிகர்களுக்கு  அதிர்ச்சியை கொடுத்தார். பின்னர், களம் கண்ட மொயீன் அலி டக் அவுட் ஆக ராபின் உத்தப்பா 2 , அம்பதி ராயுடு 4 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். அடுத்து இறங்கிய கேப்டன் தோனி சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தோனி 2 பவுண்டரி அடித்து 12 ரன்னில் பிஷ்னோயிடம் போல்ட் ஆனார்.

பின்னர், ஜடேஜா, ஃபாஃப் டு ப்ளெஸிஸ் கூட்டணி அமைத்து அணியின் எண்ணிக்கையை சற்று உயர்த்தினர். ஆட்டம் தொடக்கத்தில் இருந்து நிதானமாக விளையாடிய ஃபாஃப் டு ப்ளெஸிஸ் அரைசதம் விளாசி 76 ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் கே.எல் ராகுலிடம் கேட்சை கொடுத்து விக்கெட்டை இழக்க, இறுதியாக சென்னை அணி 20 ஓவர் முடிவில் 134 ரன் எடுத்து 6 விக்கெட்டை இழந்தது. பஞ்சாப் அணியில் அர்ஷ்தீப் சிங், கிறிஸ் ஜோர்டான் தலா 2 விக்கெட்டும், ரவி பிஷ்னோய் , ஷமி தலா 1 விக்கெட்டை பறித்தனர்.

70 ரன்னுக்குள் 5 விக்கெட்டை இழந்து சென்னை தடுமாற்றம்..!

சென்னை அணி 13 ஓவர் முடிவில் 61 ரன் எடுத்து 5 விக்கெட்டை இழந்து தடுமாறி விளையாடி வருகிறது.

இன்றைய ஐபிஎல் 2021 இன் 53 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி வருகிறது. இப்போட்டி துபாய் சர்வதேச  மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி ஃபீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட், ஃபாஃப் டு ப்ளெஸிஸ் இருவரும் களமிறங்கினர்.

வழக்கம்போல சிறப்பான ருதுராஜ் , ஃபாஃப் கூட்டணி கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 12 ரன் எடுத்து ருதுராஜ் வெளியேறி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தார். பின்னர், களம் கண்ட மொயீன் அலி டக் அவுட் ஆக ராபின் உத்தப்பா 2 , அம்பதி ராயுடு 4 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். அடுத்து இறங்கிய கேப்டன் தோனி சிறப்பாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டு கொண்டுவருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தோனி வந்த வேகத்தில் 2 பவுண்டரி எடுத்து 12 ரன் எடுத்து போல்ட் ஆனார்.

இதனால், சென்னை அணி 13 ஓவர் முடிவில் 61 ரன் எடுத்து 5 விக்கெட்டை இழந்து தடுமாறி விளையாடி வருகிறது. தற்போது களத்தில் ஜடேஜா 1*, ஃபாஃப் 29* ரன்கள் எடுத்து விளையாடி வருகின்றனர்.

Exit mobile version