ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் 19 இல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வருடத்தில் ஐபிஎல் போட்டிகள் கொரோனா காரணத்தால் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டன. ஆனால், இந்த வருட போட்டிகள் இந்தியாவில் நடத்தப்பட்டு வந்த நிலையில் கொரோனா பாதிப்புக்காரணமாக பாதியிலேயே இப்போட்டிகள் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டது. ஏனென்றால், இப்போட்டியில் பங்கு கொண்ட சில கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் இம்முடிவு எடுக்கப்பட்டது. ஐபிஎல் போட்டிகளில் 60 ஆட்டங்கள் நடைபெற இருந்த நிலையில் 29 […]