இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள 13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வருகிற 29-ந்தேதி தொடங்கி மே மாதம் இறுதி வரை நடக்க இருக்கிறது. ஆனால் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக திட்டமிட்டப்படி இந்த போட்டி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த நிலையில் டெல்லியை சேர்ந்த மோகன்பாபு அகர்வால் என்ற வக்கீல் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை ஒத்திவைக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். மேலும் இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமெனவும் […]