ஐபோன்12 புக்கிங் தொடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்பிள் நிறுவனம் 4 ஐபோன் மாடல்களை அதிரடியாக அறிமுகப்படுத்தியது. இதில் ஐபோன்12 மாடல்களின் முன்பதிவு ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தொடங்கியுள்ளது. முன்பதிவு செய்யப்படும் ஐபோன்கள் அக்.30-ம் தேதி முதல் டெலிவரி செய்யப்படும் என்றும் ஐபோன்12மினி, ஐபோன்12-ப்ரோ மேக்ஸ் மாடல்களின் விற்பனை நவம்பர் மாத இறுதியில் தொடங்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.