தாமாக முன்வந்து வழக்கை எடுத்தது தொடர்பாக அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 2008-ம் ஆண்டு தமிழக வீட்டு வசதி வாரிய அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி, தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாக அவர் மீது கடந்த 2012-ம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்து கடந்த மார்ச் மாதம் சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த […]
ரேசன் கடைகளில் உள்ள காலியிடங்களை நிரப்ப அதிவேகமாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதி. தமிழ்நாடு சட்டப்பேரவையில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்று வருகிறது. அப்போது பேரவையில் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் கூட்டுறவு நியாய விலைக் கடைகள் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எந்த மாவட்டத்தில் எங்கு கடைகள் திறக்கப்படாமல் இருக்கிறது என்று குறிப்பிட்டு தெரிவித்தால் உடனடியாக கடைகள் திறக்க […]
கூட்டுறவு சங்கங்களில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எச்சரிக்கை. கூட்டுறவு சங்கங்களில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரிசி கடத்தல், பணியாளர்களை மிரட்டி பணம் வசூலித்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குற்றங்களில் ஈடுபடும் கூட்டுறவு சங்கப் பணியாளர்கள் மீது புகார் அளிக்க 98840 00845 என்ற எண்ணை […]
தமிழகத்தில் நகர்ப்புறம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ரேசன் கடைகளில், தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் விற்பனை. இதுகுறித்து அமைச்சர் ஐ.பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் பருவமழை காரணமாக காய்கறிகள் குறிப்பாக தக்காளியின் விலை உயர்வை கட்டுப்படுத்தி மக்களுக்கு மலிவு விலையில் தரமான காய்கறிகள் மற்றும் தக்காளி கிடைக்க தமிழக அரசு பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. கூட்டுறவுத்துறை நடத்தும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் தக்காளி கிலோ ரூ.85/- ரூ.100/ வரை குறைவான விலையில் […]
5 சவரன் நகை கடன் தள்ளுபடி செய்ய விரைவில் அரசாணை வெளியிடப்படும். அதிமுக ஆட்சியில் கடன் தள்ளுபடியில் நடந்த முறைகேடுகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார். திமுக ஆட்சி வந்தால் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் கல்வி கடன் ரத்து, விவசாய கடன் ரத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். தற்போது திமுக ஆட்சிக்கு வந்துள்ளதால் 5 சவரன் நகை கடன் தள்ளுபடி எப்போது அறிவிக்கப்படும் […]