ஏப்ரல் 7-ஆம் தேதி ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆஜராக டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு விவகாரத்தில் அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் ஏப்ரல் 7-ஆம் தேதி ஆஜராக டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் அடிப்படையில் டெல்லி சிறப்பு நீதிமன்றம் இந்த சம்மன் அனுப்பியுள்ளது.
முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்து திஹார் சிறையில் நீதிமன்றக்காவலில் வைத்து உள்ளனர். நாளை மறுநாள் வரை ப.சிதம்பரத்தை நீதிமன்றக்காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி கொடுத்து உள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான சசிதரூர் , ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம் மற்றும் மனிஷ் திவாரி ஆகியோர் சந்தித்து பேசினர்.ப.சிதம்பரத்தை சந்தித்த பிறகு பேசிய சசிதரூர், 98 நாட்கள் சிறைவாசம் எதற்காக..? ரூ. 9.96 […]
ஐ.என்.எக்ஸ் முறைகேடு வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், தற்போது திகார் சிறையில் சிபிஐ விசாரணையில் உள்ளார். அவர் கடந்த 5ம் தேதி முதல் திகார் சிறையில் விசாரணைக் உட்படுத்தப்பட்டுள்ளார். இன்னும் 8 நாட்கள் அவர் திகார் சிறையில் இருக்க வேண்டி உள்ளது. இந்நிலையில் தற்போது டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனு கொடுத்துள்ளார். கடந்த 5 நாட்களாக டெல்லி உயர் நீதிமன்றம் தொடர் அரசு விடுமுறை என்பதால் இன்று அந்த ஜாமீன் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவில் […]