தர்ணாவில் ஈடுபட்டவாறு வழக்கமான அலுவல் பணிகளை மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மேற்கொண்டார். கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு மேற்குவங்க மாநில தலைமை செயலகத்திற்குள் தன்னை அனுமதிக்காததை கண்டித்து திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி 26 நாட்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அதன் பிறகு தற்போது மத்திய அரசுக்கு எதிராக அவர் கொல்கத்தாவில் தர்ணா போராட்டத்தை மேற்கொண்டுள்ளார். போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் இடத்திலேயே தனது அலுவல் பணிகளை முதலமைச்சர் மம்தா பானர்ஜி கவனித்து […]
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்தார் ரவிச்சந்திரன். ராஜீவ் காந்தி கொலையில் 16வது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட விருதுநகர் – அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ரவிச்சந்திரனுக்கு நீதிமன்றம் ஆயுள்தண்டனை வழங்கியது. இவர் ராஜீவ்காந்தி கொலையில் குற்றவாளிகளுக்கு உதவியதாக குற்றம் சாற்றப்பட்டுள்ள்ளது. 26 ஆண்டுகள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்த ரவிச்சந்திரன் இன்று முதல் 15 நாட்கள் பரோலில் வெளியே வந்தார். தமது சொத்துக்கள் தொடர்பிலான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு தன்னை பிணையில் விடுதலை செய்யுமாறு […]