தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து முதலீட்டாளர்களை ஈர்க்க ‘முதலீட்டாளர்களின் முதல் முகவரி – தமிழ்நாடு’ என்ற பெயரில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில்,தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் சென்னையில் இன்று காலை 10 மணிக்கு தொழில் முதலீட்டாளர் மாநாடு நடைபெறவுள்ளது. இதில்,தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு,தொழில்துறை செயலர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.அப்போது,முதல்வர் முன்னிலையில் 60 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும்,இந்த மாநாடு மூலமாக ரூ.70 ஆயிரம் கோடி முதலீடுகளை […]
2022ம் ஆண்டின் இறுதியில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும் என தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு. துறை வாரியான மானியக் கோரிக்கை மீது விவாதம் நடத்துவதற்கு இன்று முதல் மீண்டும் சட்டமன்றம் கூடுகிறது. அதன்படி, காலை 10 மணிக்கு கூடிய தமிழக சட்டமன்ற கூட்டத்தில் நீர்வள துறை மானிய கோரிக்கை மெது விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், உலக முதலீட்டாளர்கள் மாநாடு தமிழ்நாட்டில் நடத்தப்படும் என்றும் இந்தாண்டு இறுதியில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும் […]