சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதனால் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அரங்கங்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த மாநாட்டில் தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக, அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், சீனா, தைவான் உட்பட உலகின் பல நாடுகளின் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டில் பல்வேறு துறை சார்ந்த முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது. உலக தடகள ஆடைகள் மற்றும் […]
பொது வருங்கால வைப்பு நிதியில் (பிபிஎஃப்) முதலீடுகள் வலுவான, வரி இல்லாத ஓய்வூதிய நிதிகளை உருவாக்குவதற்கான பாதுகாப்பான வழிகளில் ஒன்றாகும். நேஷனல் பென்ஷன் ஸ்கீம் , மியூச்சுவல் ஃபண்டுகள் போன்ற அதிக வருவாய் ஈட்டும் முதலீட்டுக்களை விட பிபிஎஃப் சிறந்ததாக இருக்கிறது. பிபிஎஃப் என்பது அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் ஒரு சிறு-சேமிப்புத் திட்டமாகும். இது பல வரிச் சலுகைகள், விலக்குகள் மற்றும் மூலதனப் பாதுகாப்பின் உத்தரவாதத்தையும் வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், வருமான வரிச் சட்டத்தின் கீழ் ஈட்டப்படும் […]
வெளிநாட்டு முதலீடுகளை தமிழகத்திற்கு ஈர்க்க அமைக்கப்பட்ட சிறப்பு குழு கூட்டம் தொடங்கியுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சமயத்தில் தொழில் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டது.தற்போது ஒரு சில தளர்வுகளுடன் தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.இதனிடையே தமிழக அரசு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க தலைமை செயலாளர் தலைமையில் குழு ஒன்றை அமைத்தார் முதலமைச்சர் பழனிசாமி . இந்நிலையில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு குழுவின் ஆலோசனை கூட்டம் தலைமை செயலகத்தில் […]
வராக்கடன் பிரச்னையால் கடும் நிதி நெருக்கடியில் சிக்கிய யெஸ் வங்கியை, ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பட்டு கீழ் கொண்டுவந்தது. பின்னர் வாடிக்கையாளர்கள் ரூ.50,000க்கு மேல் பணம் எடுக்க கட்டுப்பாடு விதித்தது. மேலும் இந்த வங்கியை நெருக்கடியில் இருந்து மீட்கும் முயற்சியில் ரிசர்வ் வங்கி தற்போது இறங்கியுள்ளது. இதையடுத்து யெஸ் வங்கியின் 49% பங்குகளில் முதலீடு செய்ய எஸ்பிஐ திட்டமிட்டுள்ளதாகவும், 3 நாட்களுக்குள் யெஸ் வங்கி மீது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, நிலைமை சீராகும் என நிதியமைச்சர் சீதாராமன் […]
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துடனான போட்டியை சமாளிக்கும் விதத்தில் 20,000 கோடி ரூபாயை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.ஜியோ நிறுவனம் சலுகைகளை வாரி வழங்கிய நிறுவனம் தொலைத்தொடர்பு துறையில் லாபம் ஈட்டி வரும் நிலையில் ஏர்டெல் மற்றும் ஐடியா நிறுவனங்கள் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் ஜியோ நெட்வொர்க்கை சமாளிக்க 20 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக ஐடியா நிறுவனத்தில் நிதி அதிகாரி தெரிவித்துள்ளார். இதையடுத்து புதிய உத்வேகத்துடன் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
வாரத்தின் 7 நாட்களில், நம்மில் பெரும்பாலானோர் வெறுக்கும் தினமாக திகழ்வது திங்கள் ஆகும்; திங்கள் என்பதை வேலைக்கு செல்ல நிர்பந்திக்கும் தினமாக நினைத்து வெறுக்காமல், புது தொடக்கத்தின் ஆரம்பமாக நினைக்க தொடங்க வேண்டும். ஏன் அப்படி தெரியுமா? திங்கள் முதல் வெள்ளி வரை வீடு, வேலை என பல தொல்லைகளுக்கிடையே சிக்கி இருந்து விட்டு, சனி – ஞாயிறுகளில் தான் ‘ஹப்பா’ என மூச்சு விடவே முடியும்; இப்படித்தான் இருக்கிறது இன்றைய சூழல்! நடைமுறைப்படுத்தும் நாள் – […]
3 லட்சத்து 431 கோடி அளவுக்கு முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார். சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு இன்றுடன் முடிவடைந்தது. நிறைவு விழாவில் உரை நிகழ்த்திய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உலக முதலீட்டாளர்கள் மாநாடு மிகவும் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளதாக குறிப்பிட்டார். இதன் மூலம் 3 லட்சத்து 431 கோடி அளவுக்கு முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், கடந்த முறை நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை விட இந்த […]