குன்னூர் அருகே விமானப்படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது தொடர்பான முப்படைகளின் விசாரணை அறிக்கை தாக்கல். கடந்த டிசம்பர் 8-ஆம் தேதி குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் முப்படை தலைமை தளபதி உள்ளிட்ட 14 பேர் உயிரிழந்தனர். முப்படைகளின் குழு ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்து முழு அறிக்கையை தயார் செய்துள்ளது. இந்த நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜிநாத் சிங்கிடம் ஹெலிகாப்டர் விபத்து தோதான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தனர். இந்த விசாரணை […]
புதுக்கோட்டை:துப்பாக்கிக்குண்டு பாய்ந்து சிறுவன் உயிரிழந்தது தொடர்பான கோட்டாட்சியாரின் விசாரணை அறிக்கை,புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவிடம் தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டையில் நார்த்தாமலை அருகே மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கு துப்பாக்கி சூடு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில்,சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற பயிற்சியின்போது தவறுதலாக வீட்டிற்கு வெளியே நின்றுகொண்டு இருந்த புகழேந்தி என்ற சிறுவனின் தலையில் குண்டு பாய்ந்தது. இதனையடுத்து,சிறுவன் புதுக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.குண்டு பாய்ந்த சிறுவன் புகழேந்திக்கு புதுக்கோட்டை அரசு […]
மதுரை மேம்பாலம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்து தொடர்பான விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுரையில் உள்ள நத்தம் சாலையில் புதிதாக மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்த மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு தொழிலாளர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் அதில் ஒருவர் உயிரிழந்தார். பின் விபத்து நடந்த இடத்தை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் அவர்கள் நேரில் ஆய்வு செய்தார். இந்த மேம்பாலத்தின் ஒவ்வொரு பிரிவும் 70 டன் எடை […]