மதுரை:மதுரை முடக்குசாலை பகுதியில் மதுரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தும்படி கூறினர்.அப்போது காரில் வந்தவர்கள், காரை நிறுத்தி விட்டு ஓடிவிட்டனர்.பின்னர் காரை கைப்பற்றி போலீசார் அதிலிருந்த 124 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.12 லட்சத்து 40 ஆயிரமாகும். இது குறித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தெலங்கானா மாநிலம் வாராங்கல் மாவட்டம் வார்தன்னாபட் பகுதியை சேர்ந்த ராஜூ […]
குலசேகரம்:வசந்தகுமாரி இவர் திருவட்டாரை அடுத்துள்ள மாத்தூர் அருவிக்கரை பகுதியை சேர்ந்தவர் .17.5 சென்ட் இடம் இவருக்கு சொந்தமாக இரணியல் பகுதியில் உள்ளது. இந்த இடத்தை கடந்த 2013ம் ஆண்டு நாகர்கோவில், வெட்டூர்ணிமடத்தை சேர்ந்த சசிகுமார் என்பருக்கு ரூ.54 லட்சம் தொகை பேசி விற்பனை செய்துள்ளாராம்.அப்போது 29 லட்சம் பணத்தை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்பின்னர் ரூ.25 லட்சத்தை கொடுக்காமல் சசிகுமார் தாமதம் செய்துள்ளார். இந்தநிலையில் பாக்கி பணத்தை வசந்தகுமாரி நேற்று முன்தினம் சசிகுமாரிடம் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் […]
கருங்கல்:பபிதா ஸ்வீட்டி இவர் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்தவர் .இவர் இன்ஜினியரிங் படித்துள்ளார். தற்போது நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். சிதறால் பகுதியை சேர்ந்த ஏசி மெக்கானிக் ஆஸ்பின். பபிதா ஸ்வீட்டி வேலை பார்க்கும் நிறுவனத்தில் உள்ள ஏசியை பழுது பார்க்க வந்தபோது, இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டு காதலாக மாறியது.பபிதா ஸ்வீட்டியின் பெற்றோருக்கு காதல் விவகாரம் தெரியவந்தது. அவர்கள் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.பபிதாவிற்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்தனர். இதற்கிடையே கடந்த […]
தமிழகத்தில் நேற்று வழக்கறிஞர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, போராட்டம் நடத்தினர். குமரி மாவட்ட வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு இந்த போராட்டத்துக்கு ஆதரவு கொடுத்து இருந்தார்கள். இதையடுத்து நாகர்கோவிலில் நேற்று வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் இறங்கினர். நாகர்கோவிலில் நீதிமன்ற வளாகம் முன் வக்கீல் சங்க தலைவர் மகேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் வக்கில் சங்க செயலாளர் வக்கீல் மரிய ஸ்டீபன், பொருளாளர் பார்த்தசாரதி மற்றும் ஏராளமான வழக்கறிஞர்கள், வக்கீல் சங்க நிர்வாகிகள் […]