ஐஎன்டியுசி தேசிய பொதுச் செயலாளராக டாக்டர் அ.அமீர்கான் நியமனம்.!

ஐ.என்.டி.யு.சி-வுக்கு தேசிய பொதுச் செயலாளராக தென்காசியை சேர்ந்த டாக்டர் அ.அமீர்கான் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய காங்கிரஸ் கட்சியின் கீழ் செயல்படும் ஐ.என்.டி.யு.சி எனப்படும் இந்திய தேசிய தொழிற்சங்க அமைப்புக்கு அண்மையில் முக்கிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி, தற்போது தென்காசி மாவட்டம் பொட்டல்புதூரைச் சேர்ந்த டாக்டர் அ.அமீர் கான் என்பவரை (INTUC) இந்திய தேசிய தொழிற்சங்கத்தின் தேசிய பொதுச் செயலாளராக, (INTUC)  தேசியத் தலைவர் சுவாமிநாத் ஜெய்ஸ்சுவால் நியமித்துள்ளார்.

Bharat Bandh: வங்கி சேவைகளில் செக் கிளியரன்ஸ் மற்றும் ஏடிஎம்கள் பாதிப்பு

அரசின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டு மன்றம் அழைப்பு விடுத்துள்ள 2 நாள் பாரத் பந்த் (நாடு தழுவிய வேலைநிறுத்தம்) திங்களன்று வங்கி சேவைகளை பாதித்துள்ளது.நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக வங்கி ஊழியர்களில் ஒரு பகுதியினர் பணிக்கு வரவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. அனைத்து இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (AITUC), இந்திய தொழிற்சங்கங்களின் மையம் (CITU) மற்றும் இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (INTUC) போன்றவை தொழிலாளர் சட்டங்களில் முன்மொழியப்பட்ட மாற்றங்களையும் தனியார்மயமாக்கலையும் … Read more