திரைப்படங்களில் உள்ள பாடல்களுக்கு இணையாக சமூக வலைதளமான யூ-டுப்பில் பல ஆல்பம் பாடல்கள் வெளியாகி வருகின்றது.அந்த வகையில் பெண்களை மையப்படுத்தி வெளியான ஆல்பம் பாடல் தான் காரிகை.அந்த பாடலின் விமர்சனத்தை நாம் இதில் காண்போம்… கடல் அலை போல ஓயாமல் அடிக்கும் சில பெண்களின் வாழ்வில் நடக்கும் துன்பங்களை தடுக்க முடியாது .வேசம் இல்லா பாசம் எங்கும் பல பெண்களின் குரல் ஒன்று சேர்ந்து ஒலிக்கும் காலம் ஒரு நாள் கண்டிப்பாக வரும்.காலம் மாற மாற அடிமை […]
பெண்கள் என்பவர்கள் கடவுளுக்கு இணையானவர்கள். நமது வாழ்க்கையில் பெண்கள் அம்மா, அக்கா, அத்தை, சித்தி, மனைவி என பல உறவு முறைகளில் இருக்கிறார்கள்.ஆனால் அவர்களுக்கு இன்னும் இந்த சமுதாயத்தில் முழுசுகந்திரம் கிடைக்கவில்லை. மேலும் இன்னும் பல கிராமங்களிலும் பெண்களை அடிமைபடுத்தி அவர்களை துன்புறுத்தும் ஆண்கள் சமுதாயம் இருந்து தான் வருகிறது.முன்றைய காலகட்டத்தில் “அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு” என்று பெண்களின் கல்விஉரிமை மறுக்கபட்டது. பெண்களின் கல்வி உரிமையை நிலைநாட்ட பல தலைவர்களும் அரும்பாடுபட்டனர். ஆனால் இன்றைய விஞ்ஞான […]
பெண்களின் வாழ்க்கையைபாதிக்கும்சமூகசீர்கேடுகள். பல தடைகளை தாண்டி சாதனை படைக்கும் பெண்கள். பெண் என்பவள் பெருமைக்குரியவள். ஆனால் இன்றைய சமூகம் பெண்களை விளம்பர பொருளாக தான் பார்க்கின்றனர். இந்த நிலை என்று மாறுகிறதோ அன்று தான் பெண்களின் வாழ்வில் சந்தோசமான, நிம்மதியான விடியல் பிறக்கும். நமது முன்னோர்களின் காலத்தில் பெண் தைரியம் இல்லாதவள் என்ற எண்ணத்தோடு அவளை வீட்டிலேயே முடக்கி, அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என, அன்றைய காலகட்டத்தில் பெண்களின் கல்வி கண்கள் குருடாக்கப்பட்டது. இன்றைய காலகட்டத்தில், ஆண்களை […]
அமெரிக்காவில் 18-ம் நூற்றாண்டில் தொழிற்சாலை மற்றும் அலுவலகங்களில் ஆண்கள் மட்டும் வேலை செய்து வந்தனர். வீட்டுவேலைகளை பார்ப்பதற்காக மட்டும் பெண்களை வீட்டிலே இருந்தனர். பல பெண்களுக்கு ஆரம்ப கல்வி கூட தராமல் மறுக்கப்பட்டது. நிலக்கரி சுரங்கம் மற்றும் தொழிற்சாலை போன்ற இடங்களில் பெண்களுக்கு 1857-ம் ஆண்டு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது. பெண்களால் தொழிற்சாலைகளிலும் வேலை செய்ய முடியும் என உலகத்திற்கு உணர்த்தப்பட்டது. ஆண்களுக்கு நிகராக வேலை வாய்ப்பு கிடைத்ததே தவிர, குறைந்த ஊதியம் பெண்களுக்கு வழங்கப்பட்டது. இதனால் பெண்கள் […]
அடிமை தனத்தை அடியோடு அளிக்கும் சக்தி வாய்ந்தவர்கள் பெண்கள். விரைவில் பெண்களின் வாழ்வில் விடியல் பிறக்கும். பெண்கள் அடிமையாக இருக்க பிறந்தவர்கள் இல்லை. ஆள பிறந்தவர்கள். பெண்ணடிமைத்தனம் என்பது வரலாற்றின் பெரும் பகுதியில் பெண்கள் சமவுரிமை, வாய்ப்புக்கள் பெறாமல் தாழ்வுநிலையில் வாழ்ந்ததையும், அவர்களுக்கு எதிரான பல்வேறு வன்முறைகளையும், இதை ஏதுவாக்கிய சமய சமூக பொருளாதார அரசியல் கட்டமைப்பையும் குறிக்கிறது. சமூகங்களில் பெண்களின் மனித, உளவியல், சமூக, அரசியல், பொருளாதார மற்றும் பிற உரிமைகளும் சுதந்திரங்களும் ஆண்களுக்கு இணையாக […]
1857ஆம் ஆண்டு உலகின் பல புரட்சிகளை தலைமை தாங்கி நடத்தி உள்ளது. இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தைப் போலவே பெண்களின் விடுதலைக்கு ஒரு பெரும் போராட்டத்தை இந்த ஆண்டு முன்னெடுத்துள்ளது. அமெரிக்காவில் 1857ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் தேதி துணி துவைக்கும் பெண் தொழிலாளிகள் ஒரு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதாவது குறிப்பாக பெண்களுக்கு சம ஊதியம், சரியான வேலை வாய்ப்பு, ஆண்களுக்கு நிகரான வசதிகள் என அனைத்தும் வேண்டும் என போராட்டம் நடத்தப்பட்டது. ஆனால், அப்போது அமெரிக்க […]
மார்ச் 8-ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் (International Women’s Day) கொண்டாடப்படுகிறது. சர்வதேச மகளிர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 8-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்த பெண்கள், தற்போது வானில் பறந்து கொண்டிருக்கின்றனர்.பெண் வயிற்றில் பிறந்து, பெண்ணால் வளர்க்கப்பட்டு, பெண்ணோடு வாழ்பவர்கள்தான் எனினும், பெண்ணின் துயரங்களையும், விருப்பங்களையும், உணர்வுகளையும் ஆண்கள் தெரிந்து கொள்வதில்லை. தெரிந்து கொள்ள இந்த ஆணாதிக்க சமூகம் விரும்புவதுமில்லை.அதற்கு வித்திட்ட பல்வேறு போராட்டங்களின் வெற்றியே இந்த மகளிர் தினமாகும். இந்த […]