உலக அளவில் கிரிப்டோகரன்சியின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில்,கிரிப்டோகரன்சி மிகப்பெரிய ஆபத்து என்றும் பணமோசடி மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவிக்கு அவை பயன்படுத்தப்படலாம் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக,அமெரிக்காவில் நடைபெறும் சர்வதேச நாணய நிதியத்தின் கருத்தரங்கில் பங்கேற்று பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,கூறுகையில்: “எல்லா நாடுகளுக்கும் கிரிப்டோகரன்சி மிகப்பெரிய ஆபத்துதான்.ஏனெனில்,பணமோசடி மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதற்காக அத்தகைய நாணயம் பயன்படுத்தப்படும் வகையில் உள்ளது. இந்த முறைகேடுகளை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒழுங்குபடுத்துவதே ஒரே பதில் […]
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த டிசம்பரில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான பெரும் வரிக்குறைப்பை அறிவித்தார். இதன் தாக்கத்தால் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி வேகம் பிடிக்கும் என கருதப்படுகிறது. அமெரிக்காவின் வரிக்குறைப்பு நடவடிக்கைகளால் வரவிருக்கும் நிதியாண்டில் உலகளாவிய பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என உலகப் பொருளாதார மன்றம் கணித்துள்ளது. சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் வெளியிடப்பட்ட அறிக்கையில், 2018-19ம் ஆண்டுகளில் உலக பொருளாதார வளர்ச்சி 3.9 ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது கடந்த அக்டோபர் மாத கணிப்பைக் காட்டிலும் […]
துனீசியாவில் IMFக்கு எதிரான மக்கள் எழுச்சி. நாட் கணக்காக தொடரும் ஆர்ப்பாட்டங்கள். பல நகரங்களில் அரச அலுவலகங்கள் தாக்கப் பட்டன. 200 பேர் கைது. ஆர்ப்பாட்டக்காரரை இடதுசாரிக் கட்சிகள் தூண்டி விடுவதாக துனீசிய அரசு குற்றம் சாட்டுகின்றது. துனீசியாவுக்கு கடன் வழங்கும் IMF அறிவுறுத்தல் காரணமாக, அத்தியாவசிய பொருட்களுக்கான அரசு மானியம் குறைக்கப் பட்டது. வரி உயர்த்தப் பட்டது. இதனால், ஜனவரி 1 தொடக்கம் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. 2011 ம் ஆண்டு கிளர்ந்தெழுந்ததை விட, தற்போதைய […]