சென்னை : சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் T20 தொடரில், 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் 2025 இன் மூன்றாவது போட்டி நேற்றைய தினம் இந்தியா மாஸ்டர்ஸ் மற்றும் இங்கிலாந்து மாஸ்டர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. மும்பையில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து மாஸ்டர்ஸ் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டு இழப்புக்கு 132 ரன்கள் எடுத்தது. […]