சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் (டி.ஜி.சி.ஏ) திட்டமிடப்பட்ட சர்வதேச வணிக பயணிகள் விமானங்களுக்கான தடையை நவம்பர் 30 வரை நீட்டித்துள்ளது. டி.ஜி.சி.ஏ ஒரு அறிக்கையில், திட்டமிடப்பட்ட சர்வதேச வணிக பயணிகள் சேவைகள் தடை அடுத்த மாதம் நவ.30-ம் தேதி வரை தொடரும் என்று விமான போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், சர்வதேச வணிக விமானங்களை விமான போக்குவரத்து இயக்குநரகம் அனுமதித்த விமானங்கள் தொடர்ந்து இயக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு காரணங்களால் அழிந்து வரும் பனிச்சிறுத்தைகளை பாதுகாக்க ஆண்டுதோறும் அக்டோபர் 23ஆம் தேதியான இன்று சர்வதேச பனிச்சிறுத்தை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. மத்திய ஆசியாவில் உள்ள உயரமான மலைப்பாறை தொடரில் பெரும்பாலாக காணப்படும் இந்த பனிச்சிறுத்தைகள் சட்டவிரோதமான முறையில் வேட்டையாடுவதாலும், பருவநிலை மாற்றத்தாலும்,உணவு இல்லாமையாலும் அழிந்து வருகிறது. இதனை தடுக்க சர்வதேச பனிச்சிறுத்தை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.மேலும் இந்த தினத்தை வனவிலங்குகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் தினமாகவும் அனுசரிக்கப்படுகிறது.
மேற்கு வங்காளத்தின் மால்டா மாவட்டத்தில் பாம்பு விஷத்தை ஒரு சர்வதேச மோசடி கடத்தல் கடந்த வெள்ளிக்கிழமை நடந்துள்ளது. மேலும் மாநில சிஐடி மற்றும் போலீசாரின் முக்கிய நடவடிக்கையில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தனர். பாக்குஹோட் பெட்ரோல் பம்ப் பகுதியில் உள்ள ஒரு காரில் இருந்து சுமார் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள 600 கிராம் பாம்பு விஷத்தை பமோங்கோலா காவலர்கள் பறிமுதல் செய்தனர். இந்த சோதனையில் இரண்டு பபேர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவர்கள் […]