தமிழக எம்.பி க்களை இடை நீக்கம் செய்ததன் மூலம் தமிழகத்தை மத்திய அரசு அவமதிப்பதாக விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார். மேகேதாட்டு அணை தொடர்பாக கர்நாடக அரசுக்கும் மத்திய அரசுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தமிழக விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் 250 க்கும் மேற்பட்ட விவசாயிகள் நடை பயணம் மேற்கொண்டுள்ளனர். நடைபயண முடிவில் கர்நாடகா எல்லையான ஓசூரில் முற்றுகை போராட்டம் நடத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். இதனிடையே திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த […]