பிரதமர் நரேந்திர மோடி நாளை காலை 10:30 மணிக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் மைய-மாநில அறிவியல் மாநாட்டை திறந்து வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு நாள் மாநாடு அகமதாபாத்தின் அறிவியல் நகரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் (அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமை) எஸ்.டி.ஐ விஷன் 2047 உள்ளிட்ட வெவ்வேறு கருப்பொருள் பகுதிகளில் அமர்வுகள் அடங்கும். அவை, எதிர்கால வளர்ச்சி பாதைகள் மற்றும் மாநிலங்களில் எஸ்.டி.ஐ க்கான பார்வை; உடல்நலம் – அனைவருக்கும் டிஜிட்டல் சுகாதார பராமரிப்பு; […]
புதிய கண்டுபிடிப்பு சாதனைகளுக்கான தர வரிசை பட்டியலில் சென்னை ஐ.ஐ.டி.க்கு மீண்டும் முதலிடம் கிடைத்துள்ளது. நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் மத்திய அரசின் நிதி உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், மாநில அரசு நிதி உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், மாநில அரசு நிதி அளிக்கும் தன்னாட்சி கல்லூரிகள், தனியார் பல்கலைக்கழகங்கள், தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் புதுமையான கண்டுபிடிப்பு சாதனைகள் குறித்த ஆய்வுகளின் படி, […]
புளித்த கீரையின் தண்டில் இருந்து நாரை எடுத்து நாப்கின்களை செய்து அசத்தி வருகின்றனர் கோயம்புத்தூர் பேஷன் டெக்னாலஜி மாணவர்கள் நிவேதா, கௌதம். பெண்களுக்கும், சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தாத இந்த நாப்கின் கண்டுபிடிப்புகளுக்காக மத்திய அரசின் பல்வேறு விருதுகளை நிவேதா, கெளதம் பெற்றுள்ளனர். பிளாஸ்டிக்கால் செய்யப்படும் நாப்கின்களால் உடலுக்கு கேடு என்பதால் இயற்கையை தேடி அலைந்து கொண்டிருக்கும் நிலையில் புளித்த கீரையின் தண்டில் நாப்கின்களை செய்து அசத்தி வருகின்றனர் கோயம்புத்தூர் பேஷன் டெக்னாலஜி மாணவர்கள் நிவேதா, கௌதம். பெண்கள் […]
நாமக்கலை சேர்ந்த பொறியியல் பட்டதாரி ஒருவர், வீடு இல்லாதவர்கள் குறைந்த செலவில் வசிப்பதற்கு நடமாடும் வீட்டை வடிவமைத்துள்ளார். இந்த ஆட்டோ வீடு ரூ.1,00,000 மதிப்பில், பல சிறப்பம்சங்கள் நிறைந்த சூரிய மின்சக்தி மூலமாக தயாரிக்கப்பட்டுள்ளது. புத்தகத்தில் படித்து பயின்றதை நடைமுறைக்கு ஏற்றவாறு புதிய கண்டுபிடிப்புகளை மாற்றுவதை கல்வியின் சிறப்பாக அமைகிறது. பின்னர் தற்போது உள்ள இளைஞர்கள் நடைமுறைக்கு ஏற்றவாறு புது புது கண்டுபிடிப்புகளை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான அருண் […]
பொங்கல் வந்து விட்டால் வீட்டில் உள்ள தட்டு முட்டு சாமனெயெல்லாம் வெளியே கொண்டு வந்து போட்டு விடுவார்கள். வீடுகளில் உள்ள தரையெல்லாம் கரண்டியைக் கொண்டு சுரண்டி புது மண் போடுவார்கள். இதற்காகவே ஊரைவிட்டு வெளியே இருக்கும் மண் மேடுகளில் கூடை கூடையாய் மண் எடுப்பார்கள்.மண்ணை வீட்டின் வெளியே கொட்டி தண்ணீர் விட்டு, நல்லா சாணி மிதிப்பது போல் மிதித்து வீட்டின் தரையில் பூசிக் கொண்டு வருவார்கள்.வீட்டை அழகு படுத்தி சுவருக்கு வண்ணம் ( வெள்ளை ) அடிப்பார்கள்.