கிறிஸ்துமஸ் அன்று இங்கிலாந்தில் வானில் விண்கல் மழை பொலிவு ஏற்பட்டுள்ளது படமாக்கப்பட்டு, இணையதளத்தில் வைரலாகி வருகிறது. வானில் அரிதான இயற்கையின் அழகிய நிகழ்வுகள் மற்றும் சில ஆபத்தான நிகழ்வுகள் அவ்வப்போது தோன்றுவது உண்டு. எல்லா நிகழ்வுகளும் அனைவரும் பார்ப்பதற்கு கிடைப்பதில்லை, அனால், தற்போதைய நவீன காலகட்டத்தில் பார்ப்பவர்கள் படமாக்கி அனைவரும் பார்க்கும் வகையில் பகிர்ந்து விடுகின்றனர். அது போல இங்கிலாந்தில் கிறிஸ்துமஸ் அன்று இரவு ஒரு அரிய நிகழ்வு ஒன்று ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்தில் உள்ள எசெக்ஸ் எனும் […]
உலகிலேயே மோசமான உணவு இட்லி தான் என கூறி மரண கலாய் வாங்கிய இங்கிலாந்து பேராசிரியர் எட்வர்ட். இங்கிலாந்து நாட்டின் பேராசிரியரான எட்வர்ட் ஆண்டர்சன் என்பவர் தென் மாநில மக்களின் விருப்பமான உணவாகிய இட்லி தான் உலகிலேயே மோசமான உணவு என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இவ்வாறு பதிவிட்டதற்கு தமிழக மக்கள் சும்மா இருப்பார்களா? தென் மாநிலங்களில் ஏராளமான மக்கள் கண்டனம் தெரிவித்ததுடன், காங்கிரஸ் எம்பி சசிதரூர் அவர்களின் மகனும் கடும் விமர்சனத்துடன் கூடிய கண்டனத்தை […]
இரண்டாவது முறையாக இங்கிலாந்தை கொரோனா அலை தாக்கினால், தவிர்க்க முடியாது என பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்கள் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதிலும் கொரானா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் தீவிரமடைந்து கொண்டே செல்கிறது. மூன்று கோடிக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 9 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்த கொரானா வைரஸை கட்டுப்படுத்த உலகம் முழுவதிலும் பல்வேறு நாடுகள் தடுப்பூசி மருந்துகளை போட்டிபோட்டு கண்டுபிடித்துக் கொண்டு உள்ளன. இந்நிலையில் இங்கிலாந்தில் மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் […]
இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டரின் புறநகர் பகுதி சல்போர்ட்டில் உள்ள மருத்துவ குடோனிலிருந்த 80 ஆயிரம் முக கவசங்கள் 3 மர்ம நபர்களால் திருட்டு. இங்கிலாந்தில் கொரோனாவின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது. இதுவரை 31 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், அந்நாட்டு மக்கள் தனி மனித இடைவெளி, முக கவசங்கள் மற்றும் சோப்புகள் ஆகியவை அத்தியாவசியமான பொருள்களாக உபயோகித்து வருகின்றனர். இந்நிலையில், தற்பொழுது இங்கிலாந்தின் முக்கியமான மான்செஸ்டரின் புறநகர் பகுதி சல்போர்ட்டில் உள்ள மருத்துவ குடோனில் 1.5 […]
கொரோனா பாதிப்பில் இத்தாலியை விட உயிரிழப்பில் இங்கிலாந்து முதலிடத்தில் உள்ளது. உலகம் முழுவதும் தனது கோர முகத்தை காட்டி வரும் கொரோனாவால் லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். தற்போது இதன் தாக்கம் குறையாமல் பல நாடுகளில் கொரோனா பாதிப்பும் உயிரிழப்பும் அதிகரித்து கொண்டே வருகிறது. இதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. இதனை அடுத்து உலகம் முழுவதும், 3,728,047 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 258,356 பேர் உயிரிழந்தும் உள்ளனர். மேலும், கொரோனாவிலிருந்து 1,242,500 பேர் குணமடைந்துள்ளனர். […]