சதுரங்க போட்டியில் முதலிடம் பிடித்த தமிழகத்தைச் சேர்ந்த இனியன் பன்னீர்செல்வத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் திமுக எம்.பி கனிமொழி. தனது 5 வயது முதல் சதுரங்க விளையாட்டை விளையாடியவர் தான் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த இனியன். தற்பொழுது 17 வயதுடைய இவர், அமெரிக்காவில் நடைபெற்ற அமெரிக்க வேர்ல்ட் ஓப்பன் சதுரங்க போட்டியில் பங்கேற்று முதலிடம் பிடித்துள்ளார். இதற்க்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், திமுக எம்.பி கனிமொழி அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். […]