சீனாவில் கடந்த சில மாதங்களாக சிறுவர் மற்றும் குழந்தைகளுக்கு புது வகையான காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகின்றன. இந்த புதிய வகையான காய்ச்சல் என்பது சுவாச நோய் தொற்று என கூறப்பட்டது. சுவாச நோய் தொற்று பரவிவரும் நிலையில், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வரும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் சீனாவில் புதிய சுவாச நோய் தொற்று உருவாகியுள்ளதா என்ற சந்தேகம் உலக சுகாதார அமைப்புக்கு எழுந்தது. இந்தப் புதிய நோய் பாதிப்புகள் குறித்து சீனாவிடம் உலக சுகாதார […]
புதுச்சேரியில் 7 பேருக்கு பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தகவல். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கொரோனா, டெங்கு, ஃப்ளூ, பன்றிக் காய்ச்சல் போன்ற பல்வேறு வகையான காய்ச்சல்கள் பரவி வருகிறது. இந்த காய்ச்சல்களை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரியில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவியதால் மருத்துவமனைகளில் குழந்தைகள் அனுமதி அதிகரித்தது. பின்பு பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டதை அடுத்து காய்ச்சல் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த […]
தமிழகத்தில் ப்ளூ காய்ச்சல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்கள் மிக அதிகமாக பாதிக்கப்படாத வகையில் போர்க்கால அடிப்படையில் மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். – மத்திய அமைச்சருக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் தற்போது புதுவித வைரஸ் காய்ச்சலான ஃப்ளூ காய்ச்சல் சற்று அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. இதுகுறித்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் […]
பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் இன்ஃபுளூவென்சா காய்ச்சல் முன்னெச்சரிக்கை நெறிமுறைகளை அனுப்பியுள்ளார். தமிழகத்தில் தற்போது இன்ஃபுளூவென்சா காய்ச்சலுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தாக்கம் வெகுவாக குறைந்துள்ள இந்த நேரத்தில் தான் இன்ஃபுளூவென்சா காய்ச்சல் சற்று தலை தூக்க ஆரம்பித்துள்ளது. இதனை ஆரம்பத்திலேயே முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலம் கட்டுப்படுத்த தமிழக சுகாதாரத்துறை களத்தில் இறங்கியுள்ளது. இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் முன்னெச்சரிக்கை […]
தமிழ்நாட்டில் 282 பேருக்கு இன்ஃபுளுயன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் இன்ஃபுளுயன்சா என்ற HIN1 காய்ச்சலால் 282 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தார். HIN1 காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 13 பேருக்கு அரசு மருத்துவமனையிலும், 215 பேருக்கு தனியா மருத்துவமனையிலும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மக்கள் பதற்றமடையும் சூழல் இல்லை, குழந்தைகள் இருமும் போதும், தும்மும் போதும் காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளதால் பெற்றோர்கள் முகக்கவசம் அணிய […]
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்நிலையில், இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட நாடுகளில் முதலிடத்தில் அமெரிக்கர் உள்ள நிலையில், இரண்டாவது இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளது. இந்நிலையில், டெல்லியில், கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மத்தியில், 2020 ஆம் ஆண்டில் டைபாய்டு மற்றும் இன்ஃப்ளூயன்சா நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ஆகாஷ் ஹெல்த்கேர் சூப்பர்-ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அவர்கள் கூறுகையில், கடந்த இரண்டு மாதங்களில் […]