தஞ்சாவூரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்த பெண்ணுக்கு கடந்த 7 ஆம் தேதி பிறந்த ஆண் குழந்தைக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதியாகியுள்ளது. அதாவது தஞ்சை மாவட்டத்தை பொறுத்தவரையிலும் கும்பகோணம், பட்டுக்கோட்டை, தஞ்சை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களில் சுமார் 16 நபர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில் டெல்லிக்கு சென்று வந்த ஒரு நபரின் வீட்டில் உள்ளவர்களுக்கு கடந்த 7 ஆம் தேதி கொரோனா பரிசோதனைகள் முடிந்து, அதன் முடிவுகள் வெளிவந்தது. […]