மழை காரணமாக தாமதமாக தொடங்கிய இந்தியா-தென்னாபிரிக்கா மோதும் முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பௌலிங் தேர்வு செய்திருக்கிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் தென்னாபிரிக்க அணி மூன்று டி-20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. டி-20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ள நிலையில் ஒருநாள் போட்டித்தொடர் இன்று லக்னோவில் தொடங்குகிறது. இன்று 1:30 மணிக்கு தொடங்கவேண்டிய முதல் ஒருநாள் போட்டி மழை காரணமாக தாமதமாக தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. […]