தமிழகத்தில் தொழில் தொடங்க ரூ.10,399 கோடி மதிப்புள்ள 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் பழனிச்சாமி முன்னிலையில் கையெழுத்து. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, உலக பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டது. தற்பொழுது அதிலிருந்து படிப்படியாக மீண்டு வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கத்தில், தொழில் துறையில் தொடர்ந்து முன்னணி மாநிலமாக தமிழகம் இருப்பதற்காக முதல்வரின் வழிகாட்டுதலின்படி, தமிழக அரசின் தொழில்துறை பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்காரணமாக, தமிழக தொழில் துறை சார்பில் […]
ஊரடங்கிற்கு பின் தொழிற்சாலைகளை இயக்குவதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது தமிழக அரசு. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி இன்று சென்னை தலைமை செயலகத்தில் காணொளிக்காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, பேசிய முதல்வர் பழனிசாமி, அரசு அறிவிக்கும் அனைத்து விதிமுறைகளை பொதுமக்கள் கடைப்பிடித்தால் மட்டுமே கொரோனா பரவலை தடுக்க முடியும் என்றும் எந்தளவிற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தருகிறார்களோ, அந்த அளவிற்கு ஊரடங்கு தளர்வு செய்யப்படும் என தெரிவித்தார். இந்நிலையில், தமிழகத்தில் ஊரடங்கிற்கு […]
சேதுபாவாசத்திரம் அருகில் உள்ள சின்ன ஆவுடையார்கோவிலில் தமிழ்நாடு தோழி கூட்டமைப்பு, செட் இண்டியா சமூக சேவை நிறுவனம், எவர்கிரீன் ரூரல் டெவலப்மென்ட் டிரஸ்ட் சார்பில் பணிதளங்களில் வேலை செய்யும் பெண்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி நாடைபெற்றது.மேலும் டிரஸ்ட் மூலம் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வண்ணம் இலவச தையல் இயந்திரம் போன்ற அவரவர் தொழிலுக்கேற்ப உபகரணங்கள் வழங்குவது, வங்கி கடன் பெற வழிவகை செய்வதாக உறுதியளிக்கப்பட்டது.