டெல்லி : மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தி பிறந்த தினமான இன்று (நவம்பர் 19) டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். தனது பாட்டி இந்திரா காந்தி பற்றி காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிடுகையில், “அன்பு மற்றும் தைரியம் என இரண்டுக்கும் உதாரணமாக எனது பாட்டி (இந்திரா காந்தி) திகழ்கிறார். தேச நலன்களுக்கான பாதையில் அச்சமின்றி […]
டெல்லி: 18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடரில் இன்று ஓம் பிர்லா புதிய சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார். தேர்வு செய்யப்பட்ட அவருக்கு பிரதமர் மோடி , எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் பேசிய சபாநாயகர் ஓம் பிர்லா, இந்திராகாந்தி ஆட்சி காலத்தில் செயல்படுத்தப்பட்ட அவசரகால (எமெர்ஜென்சி) நிலை பற்றி குறிப்பிட்டு கண்டனங்களை பதிவு செய்தார். அவர் மேலும் கூறுகையில், 1975ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்ட அவசர நிலை முடிவை இந்த அவை வன்மையாகக் கண்டிக்கிறது. […]
1961 முதல் முறை, 1983 ஆம் ஆண்டு இரண்டாம் முறை, 1997ஆம் ஆண்டு கடைசி முறை என மொத்தமாக 3 முறை இந்தியாவுக்கு பயணம் செய்துள்ளார் மறைந்த இங்கிலாந்து ராணி எலிசபெத். நேற்று இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் தனது 96வது வயதில் காலமானார். இவர் இறப்புக்கு பல நாட்டு தலைவர்கள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இங்கிலாந்தில் 10 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்பட உள்ளது. மறைந்த எலிசபத் ராணி இந்தியாவுக்கு சுதந்திரத்திற்கு பின்னர் 3 முறை […]