இந்தோனேசியா நாட்டை சமீபத்தில் உலுக்கிய நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் ஏற்பட்ட பேரழிவு தொடர்பான மறுகட்டமைப்புக்கு 100 கோடி டாலர் கடனுதவி வழங்குவதாக உலக வங்கி அறிவித்துள்ளது. இந்தோனேசியாவில் கடந்த மாதம் 29-ம் தேதி சுலாவேசி தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அங்குள்ள பலு நகரை சுனாமி தாக்கியது. இதனால் அந்நகரம் அழிவு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அங்கிருந்த வீடுகள், கட்டிடங்கள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள் அனைத்தும் இடிந்து தரைமட்டமானது. இந்த இயற்கை சீற்றத்துக்கு சுமார் 2 ஆயிரம் பேர் […]