கடற்படைக்கு சொந்தமான 53 பேருடன் மாயமான நீர்மூழ்கி கப்பலின் இடத்தை கண்டறிந்த இந்தோனேஷியா அதிகாரிகள். இந்தோனேஷிய கடற்படையைச் சோ்ந்த கே.ஆா்.ஐ. நங்காலா – 402 நீா்மூழ்கிக் கப்பல் 53 பேருடன் பாலி தீவு அருகே கடந்த புதன்கிழமை அன்று பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. அப்போது அந்தக் கப்பலுடனான தொடா்பு துண்டிக்கப்பட்டது. பின்னர் 200 மீட்டா் ஆழம் வரையிலான அழுத்தத்தை மட்டுமே தாக்குப்பிடிக்கக் கூடிய அந்த நீா்மூழ்கிக் கப்பல், 600 முதல் 700 மீட்டா் வரையிலான ஆழத்துக்கு அது சென்றிருக்கலாம் […]