Indigo: இண்டிகோ விமானத்தின் இருக்கை சேதமடைந்து இருக்கும் புகைப்படத்தை பயணி ஒருவர் பகிர்ந்து கேள்வி எழுப்பிய நிலையில் விமான நிறுவனம் அது குறித்து விளக்கமளித்துள்ளது. பெங்களூரில் இருந்து போபாலுக்கு நேற்று கிளம்பிய இண்டியோ விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் பதிவு ஒன்றை எக்ஸ் தளத்தில் பகிர்ந்தார். அதில், 6E 6465 என்ற எண் கொண்ட விமானத்தில், அமரும் இருக்கைகள் இல்லாமல் மிக கடுமையாக சேதமடைந்து இருப்பதாக புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார், மேலும் “நான் பாதுகாப்பாக தரையிறங்குவேன் […]
இந்திய கிரிக்கெட் அணியின் வீரரும் கர்நாடக மாநில அணியின் கேப்டனாகவும் உள்ள மயங்க் அகர்வால் தற்போது திரிபுரா மாநிலத்தின் தலைநகர் அகர்டலாவில் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் கர்நாடக அணி கேப்டன் மயங்க் அகர்வால் அடுத்த போட்டிக்கு சூரத் செல்வதற்காக திரிபுரா மாநிலத்தின் தலைநகர் அகர்டலாவில் இருந்து டெல்லிக்கு விமானம் மூலம் செல்ல விமான நிலையம் சென்று இருந்தார். இந்திய கிரிக்கெட் அணி வீரர் மயங்க் அகர்வால் […]
திருப்ருகரிலிருந்து டெல்லிக்கு சென்ற இண்டிகோ விமானம் ஒன்றில் இருந்த பயணி ஒருவரின் மொபைல் திடீரென்று தீ பிடித்துள்ளது. இதனை கவனித்த விமானப் பணியாளர் உடனடியாக தீயை அணைக்கும் கருவி மூலம் அதனை அணைத்துள்ளார். இதனால் எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், யாருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த விமானம் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் மதியம் 12.45 மணியளவில் பத்திரமாக தரையிறங்கியதாகவும் கூறப்பட்டுள்ளது.
மும்பையில் இருந்து டெல்லிக்கு இயங்கி வந்த இண்டிகோ விமானம் இன்று காலை பறவை மோதியதால் மீண்டும் மும்பைக்கு சென்றது. இண்டிகோ விமானம் 6E5047 காலை 8 மணியளவில் மும்பையிலிருந்து புறப்பட்டு காலை 10.15 மணிக்கு டெல்லியில் தரையிறங்க திட்டமிடப்பட்டது. ஆனால், மும்பையில் இருந்து விமானம் செல்லும்போது வழியில் பறவை மோதியதால் மீண்டும் விமானம் மும்பைக்கு திரும்பி சென்றது.
திருடப்பட்ட தனது கிரிக்கெட் பேட்டை கண்டுபிடித்து தருமாறு தனியார் விமான நிறுவனத்துக்கு ஹர்பஜன் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதாவது மும்பையில் இருந்து இண்டிகோ 6E 6313 என்ற விமானம் மூலம் கோவை வந்துள்ளார் ஹர்பஜன் சிங். அப்போது, அவர் கிரிக்கெட் கிட்டில் வைத்திருந்த பேட்டை யாரோ திருடியுள்ளார்கள். இது தொடர்பாக டிவிட்டர் பதிவில் தனது கிரிக்கெட் பேட்டை திருடிய நபரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்குமாறு ஹர்பஜன் வலியுறுத்தியுள்ளார். Yesterday I Travelled from Mumbai to Coimbatore […]
இண்டிகோ நிறுவனத்திற்கு சொந்தமான இண்டிகோ விமானம் சென்னையில் இருந்து தூத்துக்குடி சென்றது.ஆனால் தூத்துக்குடி விமான நிலையத்தில் சூறை காற்று காரணமாக மோசமான வானிலை நிலவியதால் தூத்துக்குடியில் விமானம் தரை இறங்காமல் பாதுகாப்பாக மதுரை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாக புறப்பட்டுச் சென்ற இண்டிகோ விமானத்தால் 14 பயணிகள் அவதிக்குள்ளாகினர் . கோவாவில் இருந்து ஹைதராபாத் செல்லும் விமானம் இரவு 12.05க்கு பதிலாக, 25 நிமிடங்கள் முன்னதாகவே புறப்பட்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. தங்களுக்கு உரிய முறையில் தகவல் தெரிவிக்காமல், அறிவிக்கப்பட்ட நேரத்தை விட, முன்கூட்டியே விமானத்தை இயக்கிவிட்டதாக 14 பயணிகள் குற்றஞ்சாட்டினர். ஆனால், விமான நிலையத்தில் பலமுறை அறிவிக்கப்பட்டதாகவும், அப்போது குறிப்பிட்ட 14 பேரும் வரவில்லை என்றும் கூறியுள்ள விமான நிறுவனம், அதிகாலையில் […]