Indigo: இண்டிகோ விமானத்தின் இருக்கை சேதமடைந்து இருக்கும் புகைப்படத்தை பயணி ஒருவர் பகிர்ந்து கேள்வி எழுப்பிய நிலையில் விமான நிறுவனம் அது குறித்து விளக்கமளித்துள்ளது. பெங்களூரில் இருந்து போபாலுக்கு நேற்று கிளம்பிய இண்டியோ விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் பதிவு ஒன்றை எக்ஸ் தளத்தில் பகிர்ந்தார். அதில், 6E 6465 என்ற எண் கொண்ட விமானத்தில், அமரும் இருக்கைகள் இல்லாமல் மிக கடுமையாக சேதமடைந்து இருப்பதாக புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார், மேலும் “நான் பாதுகாப்பாக தரையிறங்குவேன் […]
இண்டிகோ விமானத்தில் பயணித்த போது விமான ஊழியர்களால் தனக்கு கசப்பான அனுபவம் ஏற்பட்டதாக பாரா விளையாட்டு வீராங்கனை சுவர்னா ராஜ் புகார் தெரிவித்திருந்த நிலையில் சம்பவம் தொடர்பாக இண்டிகோ நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது. சுவர்னா ராஜ் அண்மையில் டெல்லியில் இருந்து சென்னை நோக்கி இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்தார். பயணத்தின் போது தனது தனிப்பட்ட வீல்சேரை தன்னுடன் வைத்துக் கொள்ள அனுமதிக்குமாறு கேட்ட போது தனது கோரிக்கைக்கு பதிலளிக்காமல் விமான நிறுவன ஊழியர்கள் புறக்கணித்ததாக தெரிவித்திருந்தார். இதுகுறித்து […]
பாட்னாவில் உள்ள இண்டிகோவின் விமான நிலைய மேலாளர் ரூபேஷ் குமார் சிங் வயது 42,செவ்வாய்க்கிழமை மாலை வேலையிலிருந்து வீடு திரும்பியபோது அடையாளம் தெரியாத நபர்களால் அவரது வீட்டிற்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டார். மிகவும் நெருங்கிய தூரத்திலிருந்து இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும் ,இதில் அவரது மார்பில் ஏழு குண்டுகள் பாய்ந்துள்ளது என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.இந்த கொலைக்கான காரணம் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் ,இன்னும் யாரும் கைது செய்யப்படவில்லை என்று தெரிவித்தனர்.
வானில் பறந்த விமானத்தில் கோஷங்களை எழுப்பியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று இண்டிகோ விமானம் ஒன்று சென்னையில் இருந்து மதுரை நோக்கி புறப்பட்டு சென்றது.விமானம் நடுவானில் சென்றுகொண்டிருந்த போது அதில் பயணம் செய்த சிலர் திடீரென்று எழுந்து நின்றனர். அவர்கள் எழுந்து நின்று கோஷங்களை எழுப்பினார்கள்.அதில் மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயரை வைக்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வானில் பறந்த விமானத்தில் பரபரப்பு ஏற்பட்டது.மேலும் விமான ஊழியர்கள் விமான நிலையங்களுக்கு தகவல் […]
தொழில்நுட்ப கோளாறு காரணமாக நாடு முழுவதும் பாதிக்கப்பட்டிருந்த இண்டிகோ விமான சேவை சீரானது என்று இண்டிகோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இன்று மாலை இந்தியா முழுவதும் அனைத்து விமான நிலையங்களிலும் இண்டிகோ விமான சேவை தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கியது.இதனால் பயணிகள் இண்டிகோவின் ட்விட்டர்,பேஸ்புக் மற்றும் இணையதளத்தில் தொடர்பு கொண்டு பயணிகள் தகவல்களை தெரிந்து கொள்ளலாம் என்று அந்நிறுவனம் தெரிவித்தது.மேலும் பொறுமை காத்து ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் தெரிவித்தது. இந்நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நாடு முழுவதும் பாதிக்கப்பட்டிருந்த இண்டிகோ விமான சேவை […]
தொழில்நுட்ப கோளாறு காரணமாக, நாடு முழுவதும் இண்டிகோ விமான நிறுவனத்தின் சேவை முடங்கியது. இது தொடர்பாக இண்டிகோ விமான நிறுவனம் வெளியிட்ட தகவலில்,இந்தியா முழுவதும் அனைத்து விமான நிலையங்களிலும் தங்களது விமான சேவை தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கியுள்ளது.இதனால் பயணிகள் இண்டிகோவின் ட்விட்டர்,பேஸ்புக் மற்றும் இணையதளத்தில் தொடர்பு கொண்டு பயணிகள் தகவல்களை தெரிந்து கொள்ளலாம். பொறுமை காத்து ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இந்த மாதம் 600க்கும் மேற்பட்ட விமானங்களை இண்டிகோ மற்றும் கோ ஏர் விமான நிறுவனங்கள் ரத்து செய்ய இருப்பதாக அறிவித்துள்ளன. பிராட் (Pratt) மற்றும் விட்னி (Whitney) எஞ்சின்கள் பொருத்தப்பட்ட ஏ 320 நியோ (A320neo) வகை விமானங்கள் அடிக்கடி எஞ்சின் கோளாறால் தரையிறக்கப்படுவதாக புகார் எழுந்ததையடுத்து இந்த வகை விமானங்களை இயக்குவதை நிறுத்துமாறு, விமானப் போக்குவரத்து இயக்ககம் உத்தரவிட்டது. இதையடுத்து இந்த மாதம் இண்டிகோ நிறுவனம் 488 விமானங்களையும் கோ ஏர் நிறுவனம் 138 விமானங்களையும் ரத்து […]
இண்டிகோ விமான நிறுவனம் எஞ்சின் கோளாறு காரணமாக A320 ரக விமானங்களில் மூன்றை, சேவையிலிருந்து நிறுத்தி வைத்துள்ளது. கடந்த 18 மாதங்களில் 69 முறை இண்டிகோ A320 ரக விமானங்களின் எஞ்சின்களில் ஒன்றில் கோளாறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டுக்கான விமான சேவையை இயக்கிவரும் நிலையில் இந்த எஞ்சின் கோளாறு ஏற்பட்டதையடுத்து, ஐரோப்பிய விமானப் போக்குவரத்து பாதுகாப்பு முகமை எச்சரிக்கை விடுத்தது. நடுவானில் எஞ்சின் செயலிழக்க வாய்ப்புள்ளதாகவும் அந்த முகமை கூறியிருந்தது. இதையடுத்து, A320 ரக விமானங்களில் மூன்றை மட்டும் […]