இந்தியாவில் இன்று ஒரே நாளில் 61,870 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரானா வைரஸ் தொற்று அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இந்த தொற்றால் நேற்று ஒரே நாளில் 1,033 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் கொரோனாவால் 7,494,551 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1,14,031 பேர் உயிரிழந்துள்ளனர். 6,597,209 பேர் குணமடைந்துள்ளனர். தற்பொழுது மருத்துவமனையில் 7,83,311 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.