மத்திய செய்தி ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் நடிகர் ரன்வீர் சிங்குடன் சேர்ந்து உற்சாகமாக நடனமாடிய காட்சி வெளியாகியுள்ளது. துபாயில் நடைபெற்று வரும் உலக வணிக கண்காட்சியில் இந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத்துறை தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் பங்கேற்று நடனமாடிய நடிகர் ரன்வீர் சிங், மத்திய அமைச்சர் அனுராக் தாகூரை நடனமாடும்படி அழைத்தார். உடனடியாக மத்திய அமைச்சர் அனுராக் தாகூரும், ரன்வீர் சிங்குடன் சேர்ந்து உற்சாகமாக நடனமாடினார். இந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. […]