மகளிருக்கான ஆசியக்கோப்பை தொடரில் இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தியது. வங்கதேசத்தில் நடந்து வரும் மகளிருக்கான ஆசியக்கோப்பை தொடரில் ஷெபாலி வர்மாவின் ஆல்ரவுண்ட் ஆட்டத்தால் இந்திய அணி, வங்கதேசத்தை வென்றுள்ளது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்வதாக அறிவித்தது. 20 ஓவர்கள் முடிவில் இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஸ்ம்ரிதி மந்தனா 47 ரன்களும், ஷெபாலி வர்மா 55 ரன்களும், மற்றும் ஜெமினா ரோட்ரிக்ஸ் […]
மலேசிய அணியை வீழ்த்தி ஆசியக்கோப்பையில், இந்தியா தனது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது. ஏழு அணிகள் பங்கேற்று விளையாடும் ஆசியக்கோப்பை மகளிர் டி-20 போட்டி வங்கதேசத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தனது முதல் போட்டியில் இலங்கைக்கு எதிராக விளையாடி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில் நேற்று அக்-3 அன்று மலேசியா மற்றும் இந்திய அணிகள் மோதின. டாஸ் வென்ற மலேசியா முதலில் பௌலிங் செய்தது. இதன்படி களமிறங்கிய இந்திய அணி 20 […]
மகளிருக்கான ஆசியக்கோப்பை போட்டியில், இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது. ஆசியக்கோப்பை மகளிர் தொடர் 2022, இன்று அக்-1 ஆம் தேதி தொடங்கியது. தொடக்க நாளான இன்று இந்திய அணி, இலங்கையை எதிர்த்து விளையாடியது. டாஸ் வென்ற இலங்கை முதலில் பௌலிங் செய்யப்போவதாக அறிவித்தது. இதன் படி களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜெமிமா ரோட்ரிக்ஸ் 53 […]
இந்தியா மகளிர் அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய மகளிர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்தியா தனது முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் வென்று தொடரைக் கைப்பற்றுள்ள நிலையில், இன்று மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. […]
இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய அணி, முதல் ஒருநாள் போட்டியில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்ற நிலையில் தற்போது இரண்டாவது ஒரு நாள் போட்டி நேற்று கேன்டர்பரியில் உள்ள செயின்ட் லாரன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. இதன்படி களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்தில் […]