இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் எத்தனை தொகுதி என இறுதி செய்யப்பட்டு முடிவு எடுக்கப்படும் என காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மனிதநேய மக்கள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த திமுக அழைப்பு விடுத்திருந்தது. இந்நிலையில், திமுகவுடனான தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய இ.யூ.மு.லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன், திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது […]