உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மாணவர்கள் இந்திய பல்கலைக்கழகங்களில் படிப்பை தொடர ஏற்பாடு செய்ய இயலாது. உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் இந்திய பல்கலைக்கழகங்களில் கல்வியை தொடர முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. மாணவர்களுக்கு தளர்வு செய்து கொடுத்தால் அது இந்தியாவில் மருத்துவ படிப்பின் தரத்தினை பாதிக்கும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. இந்தியாவில் இருந்து உக்ரைனில் மருத்துவ படிப்பு பயின்று வந்த மாணவ, மாணவிகள் உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக […]
கொல்கத்தாவை சேர்ந்த 24 வயது பெண் விமானி,உக்ரைன் போருக்கு மத்தியில் 800 மாணவர்களை பாதுகாப்பாக இந்தியாவுக்கு திருப்பி அனுப்பியுள்ளார். உக்ரைன் மீதான ரஷ்ய போர் கடந்த பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கி 3 வாரங்களாக நடைபெற்று வருகிறது. இந்த போரினால் உக்ரைனில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களில் 20,000 ற்கும் மேற்பட்டவர்கள் ஆபரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் தாயகம் திரும்பியுள்ளனர். இந்நிலையில் கொல்கத்தாவை சேர்ந்த 24 வயதான பெண் விமானி “மஹாஸ்வேதா சக்ரவர்த்தி”உக்ரைன் ,போலந்து,ஹங்கேரி எல்லையிலிருந்து 800 மாணவர்களை மீட்டு […]
உக்ரைனிலிருந்து தாயகம் திரும்பிய மருத்துவ மாணவர்கள் இந்திய மருத்துவக் கல்லூரிகளில் படிப்பினைத் தொடர அனுமதிப்பதோடு, அவர்களது கல்விக் கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்ய இந்திய மத்திய அரசு முன்வர வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைன் நாட்டில் ஏற்பட்டுள்ள கொடும் போர்ச்சூழலில் சிக்கி உயிர் பிழைத்து வந்துள்ள இந்திய மாணவ, மாணவியரை அவரவர் மாநிலங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து மருத்துவப் படிப்பினைத் […]
உக்ரைனில் தங்கியிருக்கும் இடங்களில் இருந்து மாணவர்கள் வெளியேற வேண்டாம் என இந்திய வெளியுறவுத்துறை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. குறிப்பாக உக்ரைனில் உள்ள சுமி நகரில் இருந்து இந்திய மாணவர்கள் உயிரை பணயம் வைத்து எல்லை நோக்கி நடந்தே செல்லும் நிலையில், இந்திய வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. ரஷ்யா – உக்ரைன் இடையே நடைபெறும் போரின் விளைவாக ஏற்கனவே கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நவீன் என்பவர் உயிரிழந்த நிலையில், மேலும் ஒரு மாணவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். எனவே யாருக்கும் […]