வாஷிங்டன் : உலகமே எதிர்பார்த்து இருந்த அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாகப் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 295 மாகாணங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றார். இதன் காரணமாக அமெரிக்காவின் 47-வது அதிபராக டிரம்ப் தேர்வாகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. டொனால்ட் டிரம்ப் ஜனவரி-25, 2025-ல் அதாவது அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அதிபராகப் பதவி ஏற்கவுள்ளார். இந்த நிலையில், அவர் அதிபராகப் பதவி ஏற்றால், அமெரிக்காவில் குடியுரிமை வேண்டி விண்ணப்பத்திற்கும் 10 லட்சம் இந்தியர்களின் கனவுக்கு […]
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் எண்ணிக்கையில் இந்தியர்கள் மூன்றாவது இடத்தில் உள்ளனர் என்றும் சுமார் 7,25,000 இந்தியர்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறி வசித்து வருவதாகவும் பியூ ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வில் கண்டறிந்துள்ளது. இதுதொடா்பாக அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள ‘ப்யூ’ ஆய்வு ஆராய்ச்சி மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், அமெரிக்காவில் 6.4 மில்லியன் (64 லட்சம்) பேர் சட்டவிரோதமாக குடியேறியுள்ளனர். இதில், இந்தியர்கள் மட்டும் 7,25,000 பேர் சட்டவிரோதமாக குடியேறி அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். சட்டவிரோத குடியேற்றத்தில் இந்தியர்கள் […]
கத்தாரில் கைது செய்யப்பட்டு, காவலில் உள்ள 8 இந்தியர்கள் வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ளது. இந்திய கடற்படையில் பணியாற்றி ஓய்வுபெற்ற 8 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கு உளவு பார்த்த புகாரில் கைதான 8 இந்தியர்களுக்கு மரண தண்டனையை கத்தார் நீதிமன்றம் விதித்துள்ளது. 8 இந்தியர்களும் பணி புரிந்த நிறுவனம் நீர்முழ்கி கப்பல்கள் தொடர்பான திட்டத்தில் இணைந்திருந்தது. உளவு பார்த்ததாக குற்றச்சாட்டப்பட்டுள்ள 8 இந்தியர்களும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் தனிமை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சமயத்தில், […]
G20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியை சந்தித்த பிறகு இந்தியர்களுக்கு 3,000 இங்கிலாந்து விசாக்களை வழங்க ரிஷி சுனக் ஒப்புதல். G20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியை சந்தித்த பிறகு இந்தியர்களுக்கு 3,000 இங்கிலாந்து விசாக்களை வழங்க அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக் ஒப்புதல் அளித்துள்ளார். இந்தோனேசியாவிலுள்ள பாலியில் ஆஸ்திரேலியா, இந்தியா, பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா உள்ளிட்ட 20 நாடுகளை கொண்ட ஜி20 மாநாடு நடைபெற்று வருகிறது. ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, மூன்று […]
பாகிஸ்தானில் உயர்கல்வி படித்தால், இந்தியாவில் வேலைவாய்ப்பு பெறவோ, படிப்பைத் தொடரவோ முடியாது. இதுதொடர்பாக UGC & AICTE வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், உயர் கல்வியைத் தொடர பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இதனால், பாக்கிஸ்தானின் எந்தவொரு பட்டப்படிப்பு கல்லூரி/கல்வி நிறுவனத்தில் சேர்க்கை பெற விரும்பும் எந்தவொரு இந்தியரும் மற்றும் இந்தியாவின் வெளிநாட்டுக் குடிமகனும், பாகிஸ்தானில் பெற்ற கல்வித் தகுதிகளின் அடிப்படையில் (எந்தப் பாடத்திலும்) இந்தியாவில் வேலை வாய்ப்பு பெறவோ அல்லது உயர்கல்வி படிப்பை தொடரவோ தகுதி பெற […]
உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற அங்குள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. மனிதாபிமான அடிப்படையில் வெளியேற கொடுக்கப்பட்டுள்ள அவகாசத்தை உக்ரைனில் உள்ள இந்தியர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. ரயில் உள்ளிட்ட எதாவது, ஒரு போக்குவரத்து சேவையை பயன்படுத்தி இந்தியர்கள் அனைவரும் வெளியேறுங்க என்றும் இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வந்த நிலையில், போர் பகுதிகளில் இருந்து மக்கள் பாதுகாப்பாக மீட்க, மனிதாபிமான அடிப்படையில் உக்ரைனில் […]
உக்ரைன் எல்லையில் உள்ள இந்தியர்களுக்கு உதவ மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கோரிக்கை. ரஷ்யா – உக்ரைன் இடையே இடைவிடாத போர் நடந்து வரும் நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. அதன்படி, ஆபரேஷன் கங்கா திட்டத்தின் மூலம் ருமேனியாவில் இருந்து விமானம் மூலம் இந்தியர்களை மீட்டு வருகின்றனர். அந்த வகையில், ஹங்கேரியின் புடாபெஸ்டில் இருந்து 240 இந்தியர்கள் மூன்றாவது விமானத்தில் இன்று காலை மும்பை வந்தனர். ருமேனியாவில் இருந்து […]
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், உக்ரைனில் இருந்து 16 தமிழர்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். உக்ரைனில் சிக்கி இருந்த தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் 16 பேர் மீட்கப்பட்டுள்ளனர். உக்ரைனில் இருந்து ஹங்கேரி, ருமேனியா வந்த தமிழ்நாட்டை 17 மாணவர்கள் இந்தியா அழைத்து வரப்படுகின்றனர். ருமேனியாவில் இருந்து 5 மாணவர்களும், ஹங்கேரியில் இருந்து 11 மாணவர்களும் விமானம் மூலம் டெல்லி அழைத்துவரப்படுகின்றனர். உக்ரைனில் இருந்து டெல்லி மற்றும் மும்பைக்கு விமானத்தில் வந்துசேரும் 16 மாணவர்களை தமிழகம் அழைத்துவர […]
உக்ரைனில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உறுதி அளித்துள்ளார். உக்ரைனில் இரண்டாவது நாள் இன்றும் தொடர்ந்து வான்வெளி மற்றும் நேரடி ராணுவ படைகள் மூலம் ரஷ்யா தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், உக்ரைனிலுள்ள மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று ரஷ்ய அதிபர் புடின் உறுதியளித்துள்ளார். நேற்று இரவு தொலைபேசியில் பேசிய ரஷ்ய அதிபர், பிரதமர் மோடியுடம் உறுதியளித்துள்ள தகவலை தற்போது ரஷ்யாவே வெளியிட்டுள்ளது. […]
பண்டோரா பேப்பர்ஸ் எனும் ஆவணம் வெளியாகியுள்ள நிலையில், வெளிநாடுகளில் சொத்துக்களை குவித்த 300 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கரும் இடம் பெற்றுள்ளார். உலக அளவில் வெளிநாடுகளில் சொத்து வாங்கி குவித்தவர்கள் குறித்து கடந்த 2015 ஆம் ஆண்டு பனாமா பேப்பர்ஸ் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போதும் பண்டோரா பபர்ஸ் எனும் ஆவணம் வெளியாகியுள்ளது. சர்வதேச புலனாய்வு பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு மூலம் இந்த ஆவணத்தில் உள்ள பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. நிதி வழங்கும் 14 […]
ஆப்கானிஸ்தானில் 150-க்கும் மேற்பட்ட இந்தியர்களை, தலிபான்கள் கடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை பிடித்தது முதல் அங்கிருந்து இந்தியர்களை மீட்கும் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தியர்கள் மட்டுமல்லாது, மற்ற நாட்டினரும் அங்கிருந்து தப்பிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் 150-க்கும் மேற்பட்ட இந்தியர்களை, தலிபான்கள் கடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. காபூல் விமான நிலையம் அருகே காத்திருந்த இந்தியர்களை, நேற்று நள்ளிரவு 1 மணியளவில் தலிபான்கள் கடத்தியதாக ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஆனால், ஆப்கானிஸ்தான் […]
ஆப்கானிஸ்தானிலிருந்து விமானம் வழியாக திரும்பிய இந்தியர்கள் வந்தே மாதரம் என முழங்கிய காட்சி அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், பலர் அங்கிருந்து வெளியேறுவதற்காக விமான நிலையங்களில் குவிந்து வருகின்றனர். மேலும், தங்கள் நாட்டு மக்களை மீட்பதற்காகவும் அந்தந்த நாடுகள் முயற்சித்து வருகிறது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் நகரத்தில் உள்ள காபூலில் இருந்த 120 இந்தியர்களை இந்தியா மீட்டு வந்துள்ளது. அங்கு இருந்த தூதரக தலைவர்கள் முதல் இதில் மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் விமானம் […]
சீன கடல் எல்லைக்குள் சிக்கியுள்ள இரண்டு கப்பல்களில் 39 இந்தியர்கள் உள்ளனர். இது தொடர்பாக சீனாவுடன் இந்திய அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. சீன கடல் எல்லைக்குள் சிக்கியுள்ள இரண்டு கப்பல்களில் 39 இந்தியர்கள் இருப்பதாகவும், இது தொடர்பாக சீனாவுடன் இந்திய அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், எம்.வி. ஜக் ஆனந்த், சீனாவில் […]
இரு நாடுகளுக்கிடையில் சிறப்பு சர்வதேச பயணிகள் விமானங்களை இயக்குவதற்காக உக்ரேனுடன் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தனி இருதரப்பு விமான ஏற்பாட்டை ஏற்படுத்தியுள்ளதால், இப்போது இந்தியர்கள் 17 நாடுகளுக்கு பயணிக்க முடியும். கொரோனா தொற்றுநோய் காரணமாக வழக்கமான சர்வதேச விமானங்கள் இடைநிறுத்தப்படும்போது வணிக பயணிகள் சேவைகளை மறுதொடக்கம் செய்வதை நோக்கமாகக் கொண்டு இரு நாடுகளுக்கிடையேயான தற்காலிக ஏற்பாடுகள் ஆகும். இந்நிலையில், இங்கிலாந்து, அமெரிக்கா ஆப்கானிஸ்தான், பஹ்ரைன், ஓமான், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஈராக், கென்யா, பூட்டான், ஜப்பான், […]
உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவில் 42 லட்சத்துக்கு மேலான அமெரிக்க வாழ் இந்தியர்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் நிலை குறித்து பால் ஸ்கூல் ஆஃப் இன்டர்நேஷனல் ஸ்டடீஸ் என்ற அமைப்பு அமெரிக்க வாழ் இந்தியர்கள் பற்றிய ஆய்வு என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் முடிவுகள் வெளியான நிலையில் இந்தியஸ்போரா உச்சி மாநாட்டில் வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில், அமெரிக்காவில் வசிக்கும் இந்திய மக்களில் பெங்காலி மற்றும் பஞ்சாபி மொழி பேசுபவர்கள் அதிகமாக வறுமையில் வாடுகிறார்கள் என்று […]
வந்தே பாரத் மிஷனின் கீழ் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் 8 விமானங்களை இயக்க உள்ளதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது. இந்த விமானங்கள் ஜூலை 1 -ம் தேதி முதல் ஜூலை 14-ம் தேதி வரை இயக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது. இதில், சிட்னி மற்றும் மெல்போர்னுக்கு தலா நான்கு விமானங்கள் இயக்கப்படும் என ஏர் இந்தியா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கான முன்பதிவு நாளை மதியம் 12 மணி முதல் தொடங்க உள்ளது. இந்த முன்பதிவு ஏர் […]
இலங்கையில் சிக்கி தவித்த 713 இந்தியர்கள் கப்பல் மூலமாக தூத்துக்குடி துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்தியா முழுவதும் இந்த வைரசை அழிப்பதற்கு அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதானால், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் சிக்கி தவிக்கும் மக்கள் மீண்டும் தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப இயலாமல் தவித்து வந்தனர். இந்நிலையில், இந்திய […]
பிரிட்டனில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட 492 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸானது, தொடர்ந்து பல நாடுகளை தாக்கி வருகிறது. இதனால், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் நோயானது, இந்தியாவிலும் பல்லாயிரக்கணக்கானோரை பாதித்துள்ளது. இந்நிலையில், இந்தியர்கள் பலர் வெளிநாடுகளில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். வெளிநாடுகளில் பரவி வந்த அந்த கொரோனா வைரஸ் அங்குள்ள இந்தியர்களையும் தாக்கி உள்ளது. இந்தியாவை பூர்விகமாக கொண்ட பலர் பிரிட்டனில் உள்ளனர். பிரிட்டனில், கொரோனா வைரஸால் […]
சீனாவில் தவித்து வந்த 324 இந்தியர்கள், சிறப்பு விமானம் மூலம் மீட்கப்பட்டுள்ளார். அவர்களுக்கு இந்திய-திபெத் எல்லை பாதுகாப்பு படை முகாமில் வைரஸ் தொற்று உள்ளதா என ஆய்வு செய்தனர். கொரோனா வைரஸ், சினாவில் உள்ள வுஹான் நகரத்தில் முதல் முதலில் டிசம்பர் மாத இறுதியில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பால், இதுவரை 259 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த வைரஸின் தாக்கம், ஜப்பான், கொரியா, தாய்லாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் உறுதிசெய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சீனா […]
கொரோனா வைரசினால் உலக நாடுகள் அனைத்தும் அச்சத்தில் உள்ளன. இதனால் உலக நாடுகள் அனைத்தும் சீனாவில் உள்ள தங்களது குடிமக்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்தி வருகின்றன. அந்நாட்டில் உள்ள நூற்றுக்கணக்கான இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்துவந்தனர். இவர்களை மீட்டுவர இந்திய அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது. இதன்படி ஏர் இந்தியா விமானம் இன்று சீனாவுக்குப் புறப்பட்டவுள்ளது. கொரோனா வைரசினால் உலக நாடுகள் அனைத்தும் அச்சத்தில் உள்ளன. சீனாவின் வுகான் நகரில் இருந்து பரவிய இந்த வைரசினால் அந்நாட்டில் […]