வருகிறது ரயிலுக்கான ஜிபிஎஸ் சிஸ்டம், இஸ்ரோவுடன் இணைந்து இந்திய ரயில்வே முயற்சி

இந்திய ரயில்வே இஸ்ரோவுடன் இணைந்து நிகழ்நேர ரயில் கண்காணிப்பு (RTIS) அமைப்பை உருவாக்குகிறது. இந்திய ரயில்வே ஆனது, ரியல்-டைம் ட்ரெயின் இன்பர்மேஷன் சிஸ்டம்(RTIS) எனும் அமைப்பை இஸ்ரோவுடன் இணைந்து உருவாக்கிக்கொண்டிருக்கிறது.முதலில் 2700 ரயில் இன்ஜின்களுக்கு RTIS சாதனங்கள், 21 மின்சார ரயில்கள் பராமரிப்பு நிலையத்தில்(லோகோ ஷெட்) பொருத்தப்பட்டுள்ளன. இந்திய ரயில்வே, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துடன் (ISRO) இணைந்து உருவாக்கிய இந்த RTIS சாதனங்கள், ரயில்களின் இயக்க நேரத்தை வழங்குகிறது. கன்ட்ரோல் ஆபீஸ் அப்ளிகேஷன் (COA) மூலம் … Read more

ரயிலில் கத்தியுடன் பயணித்தால் 10 ஆண்டு சிறை.. ரயில்வே காவல்துறை எச்சரிக்கை!

கத்தியுடன் ரயிலில் சென்று அச்சுறுத்தினால் இந்திய ரயில்வே சட்டப்பிரிவு 153-ன் கீழ் 10 ஆண்டு சிறை தண்டனை. ரயிலில் பட்டாக்கத்தியுடன் பயணம் செய்தால் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என ரயில்வே காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மின்சார ரயில்களில் அட்டூழியம் செய்யும் மாணவர்களுக்கு ரயில்வே காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மின்சார ரயிலில் தொங்கியபடி தனியார் கல்லூரி மாணவர்கள் நேற்று பயணம் செய்ததாக கூறப்படுகிறது. சென்னை – திருத்தணி மின்சார ரயிலில் அட்டூழியம் செய்த மேலும் ஒரு … Read more

தமிழக மாணவர்களுக்கு ஆந்திராவில் மையம்.. இது கண்டிக்கத்தக்கது – அன்புமணி ராமதாஸ்

தொலைவில் தேர்வு மையம் ஒதுக்குவது கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ட்வீட். தமிழக மாணவர்களுக்கு ஆந்திராவில் மையம் ஒதுக்கப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இந்திய ரயில்வேயில் குரூப் டி பணியிடங்களை நிரப்புவதற்காக வரும் 8-ஆம் தேதி நடைபெறும் போட்டி தேர்வுகளை எழுதுவதற்காக தமிழக மாணவர்களுக்கு ஆந்திராவில் மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கது. தமிழக மாணவர்கள் ஆந்திர தேர்வு மையத்திற்கு … Read more

இதுபோன்று பரவும் தகவல் பொய்யானவை – இந்திய ரயில்வே துறை

ஜூலை 1-ஆம் தேதி முதல் மீண்டும் முதியோர்களுக்கான சலுகை என பரவும் தகவல் பொய்யானவை என அறிவிப்பு. கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக, ரயில்வே துறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முதியோர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகையும் ரத்து செய்யப்பட்டது. இதனால் ரயில்வே துறைக்கு கோடிக்கணக்கான ரூபாய் மிச்சமானதாகவும் கூறப்பட்டது. இதனைத்தொடர்ந்து, ஜூலை 1-ஆம் தேதி முதல் முதியோர்களுக்கான ரயில் பயண கட்டண சலுகை … Read more

ஆதார் இணைக்காமல் டிக்கெட் முன்பதிவு;வரம்பு உயர்வு – இந்தியன் ரயில்வே முக்கிய அறிவிப்பு!

ரயில் டிக்கெட் முன்பதிவின் முக்கிய வளர்ச்சியாக,ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் ஆப்ஸ் ஆகிய இரண்டிலும் முன்பதிவு செய்யக்கூடிய ஆன்லைன் டிக்கெட்டுகளின் வரம்பை இரட்டிப்பாக்க முடிவு செய்துள்ளதாக இந்திய ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி,இனி ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் ஆப்ஸ்(செயலி) ஆகியவற்றின் மூலமாக ஆதாரை இணைக்காமல் ஒரு பயனர் ஐடி மூலம் ஒரு மாதத்தில் அதிகபட்சமாக 12 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் என்றும்,மாறாக ஆதார் இணைக்கப்பட்ட நிலையில்,ஒரு பயனாளர் ஐடி மூலம் ஒரு மாதத்தில் 24 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் … Read more

ரயில்வே ஒரு நபருக்கு சொந்தமானது அல்ல – ராகுல் காந்தி

ரயில்வேயைப் பயன்படுத்தி பயணிக்கும் மில்லியன் கணக்கான ஏழை மக்களுக்கு அச்சுறுத்தல் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக கேரள மாநிலத்தில் சென்றுள்ளார்.இந்த இரண்டு நாள் பயணத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். அந்த வகையில் மலப்புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசுகையில் , ரயில்வே நம் நாட்டின் அடிப்படை பகுதியாகும். ரயில்வே ஒரு நபருக்கு சொந்தமானது அல்ல, அவை முழு நாட்டையும் சேர்ந்தவை. இது மில்லியன் … Read more

இந்திய ரயில்வே வாரியத்தின் தலைவராக சுனீத் ஷர்மா நியமனம்.!

இந்திய ரயில்வே வாரியத்தின் தலைவராக சுனீத் ஷர்மா நியமிக்கப்பட்டுள்ளார். ரயில்வே வாரியத்தின் தலைவராகவும், தலைமை நிர்வாக அதிகாரியாகவும் சுனீத் சர்மாவை நியமிக்க மத்திய அமைச்சரவை நியமனக் குழு (ஏ.சி.சி) ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஏற்கனவே இருந்த வினோத் குமார் யாதவின் பதவிக்காலம் இன்றுடன் டிசம்பர் 31 முடிவடைந்த நிலையில், புதிய தலைவராக சுனீத் சர்மாவை நியமனம் செய்யப்பட்டுள்ளது. சுனீத் சர்மா 1978ல் சிறப்பு வகுப்பு ரயில்வே பயிற்சி அதிகாரி, கிழக்கு ரயில்வேயின் பொது மேலாளராக இருந்தார். ஜி.எம். மெட்ரோ ரயில்வே … Read more

இரண்டு தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை ரத்து – ஐ.ஆர்.சி.டி.சி

ஐ.ஆர்.சி.டி.சி இரண்டு தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவைகளை ரத்து செய்கிறது. கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் குறைந்த அளவு ஆக்கிரமிப்பு இருப்பதால் லக்னோ-டெல்லி மற்றும் மும்பை-அகமதாபாத் தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயில்களை ரத்து செய்ய இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. தற்போது, ஐ.ஆர்.சி.டி.சி ஒரு அறிக்கையில், “கொரோனா  தொற்றுநோய் அச்சம் காரணமாக ஐ.ஆர்.சி.டி.சி இரன்டு தேஜாஸ் ரயில்கள் ரத்து செய்ய நிர்வாகம் முடிவு செய்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, லக்னோ- புது டெல்லி மற்றும் மும்பை-அகமதாபாத் ஆகிய வழித்தடங்களில் இயங்கும் … Read more

இந்தியா முழுவதும் மே 3ம் தேதி வரை ரயில் சேவை ரத்து

இந்தியாவில் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதையடுத்து ரயில் சேவை ரத்து நீட்டிக்கப்பட்டுள்ளது.  கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு இன்று நிறைவு பெறுவதாக இருந்ததது. இந்த ஊரடங்கை நீட்டிக்க கோரி பல்வேறு மாநில முதல்வர்களும், மருத்துவ நிபுணர்களும் அரசிடம் கோரிக்கை வைத்தனர். எனவே ஒரு சில மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.எனவே பிரதமர் நரேந்திர மோடி ,இன்றுடன் நிறைவடைய இருந்த ஊரடங்கு மேலும் 19 நாள் நீட்டிக்கப்பட்டு, வரும் … Read more